பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

முன்னுரை

இங்ஙனம் அறிஞர் பலர் ஊக்கமூட்டியதன் விளைவாகத் திருவள்ளுவர் வரலாறு, பத்துப்பாட்டின்பம், சிவஞான முனிவர் வரலாறு, மெய்கண்டார் வரலாறு, திருஞானசம்பந்தர் வரலாறு, மாணிக்கவாசகர் வரலாறு முதலிய பல கதைகளை வில்லிசையில் அமைத்தேன்.

'தமிழ் வளர்ந்த கதை' வில்லிசையைக் கேட்டு வியந்த தருமையாதீன மகாசந்நிதானம் அவர்கள், வில்லிசைக் குழுவினர் எழுவர்க்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தியருளினார்கள். நல்லார் பல்லார்தம் பாராட்டைப் பெற்ற 'தமிழ் வளர்ந்த கதை' வில்லுப் பாட்டைப் பாடக்கேட்ட சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர் திருவாளர் வ. சுப்பையா பிள்ளையவர்கள் விரும்பி அச்சிட்டு, வில்லிசையை நாடெங்கும் பரப்பும் நன்னாேக்கம் கொண்டுள்ளார்கள். இதன் வாயிலாக எனது தமிழ்ப்பணிக்கு ஊக்கம்தரும் பிள்ளையவர்கட்கு எனது உள்ளம் நிறைந்த நன்றியையும் வணக்கத்தையும் செலுத்துகின்றேன்.


தமிழ் வெல்க !

அ. க. நவநீதகிருட்டிணன்
நெல்லை அருணகிரி இசைக் கழக
விரிவுரைப் பொறுப்பாளர்.