பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தமிழ் வியா சங்கள் - 499




ஒரு மதத்தைப் பற்றிப் பிரசங்கம்செய்தால் அதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்ருெருவர், பிரசங்கியார் கூறிய கியாயங்களையும் உண்மைகளையும் அனு வளவேனும் யோசியாமல் நம் சடவுளுக்கு விரோதமாக எழுந்து இவன் பிரசங்கம் செய்யவாவது என்று கோபங்கொண்டு அவர்க்குமாருக் கியாய வாயிலாகப் போகாமல் என் சுவாமி இப்படிச் செய்தால் உன் சுவாமியும் இப்படிச் செய்தாரே என்ற புஸ்தகங்களில் எழுதிக்கொண்டும் கவிகள் பாடிக்கொண்டும் உலாவுவர். ஆதியிலிருந்த தமிழர்கள் மிகுந்த ஊக்க முள்ளவர்களாயும் எளிதில் விஷயங்களின்உண்மையை உணரக்கூடிய சக்தி யுள்ளவர்களாயும் இருந்தார்கள். ஆகையினலே தான் ஆரியர்களுடைய மதக்கொள்கைகளை அவர்கள் எளிதில் பற்றிக்கொண்டார்கள். தமிழர் களும் ஆரியர்களும் அதிகமாய் ஊடாடல் வேண்டி நேரிட்டதில்ை இருவர் குணங்களும்ஒரே மாதிரியாய் ஏற்பட்டுவிட்டன. யாம் பிடித்ததையே சாதிப்பேமென்னும் செருக்கும், எவ்வளவுகியாயமாய்க் கூறினும் உண்மை உணாாமையும், உணர்ந்தாலும் அதற்கு ஏற்க நடவாமையும் ஆகிய துர்க் குணங்கள் காலக்கிரமத்தில் உற்பத்தியாய்விட்டன. ஆகையினலேதான் மத வாதம் விசேஷமாய் அதிகரித்தது. இம்மூன்று துர்க்குணங்களையும் அற ஒழித்தாலன்றி கந்தமிழ்நாடு முன்னுக்கு வால் மர்ட்டாது.




மேலே சொல்லிய மதச் சார்பானவை யொழிந்த நூல்களிற் பெரும் பான்மை யமகமுங் கிரிபுமாக எழுதப்பட்ட அந்தாதிகளும், கலம்பகங்க ளும் மடக்குகள் கிாம்பிய சிலேடை வெண்பாக்களும், நாகபந்தம், கமலபர் தம், முரசபந்தம், முதலியன நிறைந்த சித்திரக் கவிம்ஞ்சரிகளும், மைந்தர் விளையாட்டுப் புராணமுமாயிருக்கின்றது. மேற்கூறியவற்றுட் புராண்மாவது என்னவென்ருல், பூர்வீக ஆசிரியர்களாகிய, திருத்தக்கதேவர், கல்லாடர், கம் பர்.முதலிய வித்வசிரோமணிகள் கூறிய கற்பனைகளைத் தவிர்த்து சுதந்தாயூ கத்தாலமைந்த கற்பனேகளும் அலங்காரங்களும் அர்த்த புஷ்டியும் கிஞ்சித் தேனும் இல்லாமல், கடவுளைப்பற்றித் தமக்குத் தோன்றியவாறு விலைசெய்த தாகச் சிறு பிள்ளைத்தனமாக எழுதப்பட்டிருக்கும்ஒரு நூலாம். இது கிற்க, சிலர் கலம்பகம், அந்தாதி முதலியன, பெரியகாவியங்களெ ழுதுவதற்காக ஏற்பட்ட அப்பியாசப் பிரபந்தங்களா மாகையால் அவற்றிலே எழுதி எழுதி யதிகப் பழக்கமிருந்தாலொழிய, வேறு பெரிய நூல்கள் செய்யமுடியா தென்று கூறி மயங்குவார்கள். கலம்பகம் என்பது சாமானியமான பிரபந்த மன்று. கவி செய்யும் திறமையில் மிகவும் பேர்பெற்றவர்களே கலம்பகம் எழுதத்தகுந்தவர்கள். பாடிப்பாடித் தேர்ந்தவர்களே கலம்பக மெழுதப்புகு வார்.அஃதெப்படி யென்ருல், சாதாரணமாயுள்ள விருத்தங்களைத் தமிழிற் கிஞ்சித்து அப்பியாசமுள்ளவர்களும் எழுதலாம். இப்பேர்ப்பட்டவர்கள், மடக்கும், திரிபும் துறைகளுமமைந்த கவிகள்செய்ய முடியாது. ஆகையால் இவற்றை அப்பியாசப் பிரபந்தங்களென்று கொள்ளுதல் கேவலம் அசங்கத