பக்கம்:தமிழ் விருந்து.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் - கன்னடம் 107 " இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும் இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்" என்பது சிலப்பதிகாரம். கலங்கரை விளக்கம் என்பதன் பொருள் என்ன? கலம் என்பது கப்பல்; விளக்கம் என்பது வெளிச்சம். கப்பலைத் துறைமுகத்திற்கு அழைக்கும் வெளிச்சம் என்பதே கலங்கரை விளக்கம் என்பதன் பொருள். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் இவ்வாறு பொருள் கூறுகின்றார். ஆகவே, கரை என்னும் சொல்லுக்கு அழை என்ற பொருள் பழந்தமிழில் உண்டு என்பது நன்கு விளங்கும். இத் தகைய கரை என்ற சொல் கன்னடத்தில் யாவராலும் வழங்கப்படுகின்ற தேசியச் சொல். பால் கறக்கும் வேளை வந்துவிட்டால் 'கரு கரையுத்தே' என்பர் கன்னடத்தார். கன்று தாயை) அழைக்கின்றதே என்பது அதன் பொருள். இனி, சில ஆண்பாற் பெயர்களையும் அவற்றிற்கு நேரான பெண்பாற் பெயர்களையும் பார்ப்போம் : ஒருவன் என்பதும் ஒருத்தன் என்பதும் ஆண்பாற் பெயர்கள். ஒருத்தன் என்பது பேச்சுத் தமிழிலே பெரும்பாலும் வரும். ஆயினும் அச்சொல்லின் பழமையும் செம்மையும் திருவாசகத்தால் விளங்குவதாகும். " நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி உலகெலாம் தேடியும் காணேன்"