பக்கம்:தமிழ் விருந்து.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் - கன்னடம் 109 படும். ஈருள்ளியை ஈர வெங்காயம் என்றும், வெள்ளுள்ளியை வெள்ளை வெங்காயம் என்றும் பொது மக்கள் வழங்குவர். கன்னடத்தில் ஈருள்ளியை நீருள்ளி என்கின்றார்கள். சாறு நிறைந்த வெங்காயத்தை நீருள்ளி என்று குறித்தல் பொருத்தமாகத் தோன்று கின்றது. நீருள்ளி நாளடைவில் ஈருள்ளியாயிருத்தல் கூடும். இனி, வண்டி என்ற தமிழ்ச் சொல்லை எடுத்துக் கொள்வோம். மாடு பூட்டிய வண்டியை மாட்டு வண்டி என்பர். குதிரை இழுக்கும் வண்டியைக் குதிரை வண்டி என்பர். இருப்புப் பாதையிற் செல்லும் வண்டியை ரயில் வண்டி என்பர். கன்னடத்திலும், தெலுங்கிலும் வண்டியைப் பண்டி என்கின்றார்கள். பழைய தமிழ் நூல்களில் பண்டி என்ற சொல்லே காணப்படுகின்றது. சிந்தாமணியாசிரியர், " மல்லலம் தெங்கள நீர்ப்பெய் பண்டியும் மெல்லிலைப் பண்டியும் கமுகின் மேதகு பல்பழுக் காய்க்குலை பெய்த பண்டியும் ஒல்குதீம் பண்டம்பெய் தொழுகும் பண்டியும்” என்று பாடியுள்ளார். பண்டி என்ற சொல் பழைய நூல்களிற் காணப்படுதலாலும், கன்னடமும் தெலுங்கும் பண்டி என்ற பதத்தையே வழங்குதலாலும் வண்டி என்பது பண்டியின் திரிபே என்று தெரிந்துகொள்ளு கின்றோம். தமிழில் யான், நான் என்னும் இரண்டும் தன்மை ஒருமைப் பெயர்கள். இவற்றுள் யான் என்பது மிகப் பழமை வாய்ந்தது. தொல்காப்பியம் என்னும் பழைய