பக்கம்:தமிழ் விருந்து.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+2:0 தமிழ் விருந்து சொல்லும், ஆண்மையும் வீரமும் பெரும்பாலும் போர்க்களத்திலே வெளிப்படுதலால் போரின் தன்மையைப் புறப்பொருள் இலக்கணம் விரித்துக் கூறும். இவ்விருவகை இலக்கணமும் தொல்காப்பியத் திலேயே காணப்படுகின்றது. இங்ங்னம் இலக்கியங்களிற் பயிலும் சொல்லையும் பொருளையும் தமிழிலக்கணம் வரையறை செய்வதாயிற்று. இனி, செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகு பாட்டைச் சிறிது பார்ப்போம் : இதற்கு அடிப் படையாக உள்ளது இலக்கணமே. இக் காலத்தில் சிலர் செந்தமிழ் என்றால் கடுமையான தமிழ் பல்லை யுடைக்கும் சொல்லையுடைய தமிழ் என்று தவறாகக் கருதி இடர்ப்படுகிறார்கள். பிழையற்ற தமிழே செந்தமிழ் இலக்கண வரம்பு கடந்து, கொண்டதே கோலமாக நடமாடும் தமிழ் கொடுந்தமிழ். செம்மையான தமிழ் செந்தமிழ். கோணலான தமிழ் கொடுந் தமிழ். செந்தமிழே சிந்தைக்கும் செவிக்கும் இன்பம் பயக்கும். இதனாலன்றோ "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே " என்று பாடினார் பாரதியார்.