பக்கம்:தமிழ் விருந்து.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்ட அமைச்சு 129 திருவள்ளுவர் அருளினார். உலகத்தைக் காப்பது அவ் வொளியே என்பது தமிழ் நாட்டார் கொள்கை 'உறங்கு மாயினும் மன்னவன் தன்னொளி கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்” என்று சிந்தாமணி கூறுகின்றது. அரசனிடம் தெய்வத்தன்மை அமைந்திருத்தலால் அன்றோ திருவாய் மொழியுடையார், - "திருவுடை மன்னரைக் கானின் திருமாலைக் கண்டேனே என்னும்" என்று திருவாய் மலர்ந்தருளினார்? ஆகவே, அரசனே அச்சந் தீர்ப்பவன் அறங்காப்பவன்; முறை செய்பவன்; குறை தீர்ப்பவன். அவனே இறைவனாகும் என்பது தமிழ் இலக்கியத்திற் கண்ட கருத்து. 17. தமிழ் இலக்கியத்திற் கண்ட அமைச்சு அரசாங்கம் இல்லாத நாடு இக் காலத்தில் இல்லை. அரசனுக்குரிய ஆறு அங்கங்களில் ஒன்று அமைச்சு என்று திருக்குறள் கூறுகின்றது. அமைச்சர் என்றாலும் மந்திரி என்றாலும் பொருள் ஒன்றே. மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்' என்ற வாசகம் நம் நாட்டில் வழங்கி வருகின்றது. முற்காலத்தில் மந்திரிகள் எவ்வாஇ): தெரிந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை முதலிற் சிறிது பார்ப்போம். முற்காலத்தில் தமிழரசு, முடியரசு. ஆதலால் குடிகள் அமைச்சர்களைத் தெரிந்தெடுக்கும் முறைமை இல்லை. மன்னரே தமக்கேற்ற மந்திரிகளைத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள்; நாட்டில் வாழும் குடிகளில்