பக்கம்:தமிழ் விருந்து.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்ட கடவுள் 153 என்பது திருவாசகம் சிவனடியார்களுள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி தம்மை ஆட்கொண்டருளிய பெருமானே, "பித்தா பிறைசூடி, பெருமானே அருளான " என்றெடுத்து a அத்தா உனக்காளாய் இனியல்லேன்" என்று திருப்பாசுரம் பாடினார். கடவுளை வணங்குவதற்கு ஏற்ற இடங்கள் கோவில் என்ற பெயரால் குறிக்கப்படும். தமிழ் நாட்டில் அழகிய சோலைகளே ஆதியில் கோவில்களாக அமைந்தன. கண்ணுக்கினிய பசுமை நிறமும், செவிக்கினிய இயற்கையொலியும், நாசிக்கினிய நறுமண் மும், நாவிற்கினிய நற்கனியும், உடம்பிற்கினிய குளிர் நிழலும் பொருந்திய சோலைகளில் நம் முன்னோர் கடவுளை வணங்கினார்கள், பூஞ்சோலையிலுள்ள அழகிய மலர்களைக் கடவுளுக்கு அணிந்தார்கள் கொம்பிலே பழுத்த பழங்களைக் கையுறையாக அளித்தார்கள்; இளந்தளிர்களையும் தழைகளையும் கொண்டு அருச்சன்ை செய்தார்கள். இத் தகைய சோலைகள் பிற்காலத்தில் கற்கோயில்கள் ஆயின. ஆயினும், பழைய சோலையின் அடையாளம் பலவிடங்களில் உண்டு. திருச்சிராப்பள்ளிக்கு அருகே திருவானைக்கா என்னும் சிவஸ்தலம் உள்ளது. அங்கு ஆதியில் ஒரு செழுமையான நாவல் மரத்தில் மக்கள் கடவுளை வணங்கினார்கள். அதனால் ஜம்புகேஸ்வரம் என்னும் பெயர் அதற்கு அமைந்தது. ஜம்பு என்பது வடமொழியில் நாவல் மரத்தின் பெயர். தென்னாட்டி லுள்ள திருக்குற்றாலத்தில் ஒரு குறும்பலா மரத்தில்