பக்கம்:தமிழ் விருந்து.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்ட கடவுள் . 155 " தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது" என்பது அவர் அருளிய திருக்குறள். தனக்குவமை இல்லாத தலைவனே ஆண்டவன். அவன் திருவடியைச் சரணடைந்தாலன்றிப் பிறப்பால் வரும் துன்பத்தைப் போக்க இயலாது என்பது திருவள்ளுவர் கருத்து. சரணாகதியின் பெருமையைத் தமிழ் இலக்கியங்களிற் பரககக காணலாம. குலசேகர ஆழ்வார் என்னும் பெரியார் திருமால் திருவடியே சரணம் என்று திருத்தமாகப் பாடியுள்ளார். 'தருதுயரம் தடாயேல்உன் சரணல்லால் சரண்இல்லை விரைகுழுவும் மலர்பொழில்சூழ் வித்துவக்கோட் டம்மானே அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழுங்குழவி அதுவேபோன்றிருந்தேனே" என்பது அவர் திருப்பாசுரம். உடல் பொருள் ஆவியென்னும் மூன்றையும் கடவுளிடம் ஒப்புவித்தலே சரணாகதியாகும். அவ்வாறு ஒப்புவித்த பெரியாருள் ஒருவர் மாணிக்கவாசகர். அவர் சரணாகதியின் தன்மையைத் திருவாசகத்தில் உணர்த்துகின்றார்: "அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே யனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ இன்னோர் இடையூறு எனக்குண்டோ எண்தோன் நாயகமே ” என்று பாடினார்.