பக்கம்:தமிழ் விருந்து.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழ் விருந்து பேசிய அரசரை அடக்கி வருவேன்' என்று சபையில் சபதம் கூறினான். அந் நிலையில் மன்னன் கருத்தை அங்கிருந்த அமைச்சரும் பிறரும் நன்றாக அறிந்து கொண்டார்கள். நாளும் பொழுதும் நன்கு பார்த்துச் சொல்லும் வானநூல் அறிஞன் எழுந்தான் அரசே ! வடநாட்டின்மீது படையெடுப்பதற்குப் பொருத்தமான நல்ல நேரம் இதுவே. இப்பொழுது புறப்பட்டால் மாற்றரசர் எல்லோரும் தோல்வியுற்று உன் பாதம் பணிவார்கள்' என்று அறிவித்தான். அதுகேட்ட மன்னவன், அப்பொழுதே தன் வெண்கொற்றக் குடையையும், நெடிய வாளையும் வடதிசையில் பெயர்த்து வைக்கப் பணித்தான்; படை திரட்டுமாறு படைத்தலைவர்க்கு ஆணையிட்டான். சேரன் தலைநகரமாகிய வஞ்சி மாநகரத்தில் போர்ப்பறை முழங்கிற்று. வீரர்கள் மகிழ்ந்து எழுந்து திரண்டார்கள். அரசன் வஞ்சிமாலை சூடிப் பட்டத்து யானைமீதேறிப் போருக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில் அவன் வழிபடும் சிவன் கோயில் இருந்தது. அரசன் அக் கோயிலை வலம்வந்து வணங்கினான்; சிவன் அருளின் சின்னமாகப் பெற்ற பூமாலையைச் சிரத்தில் அணிந்து கொண்டான்; அப்பால் ஆடகமாடம் என்னும் திருக்கோயிலிற் பள்ளிகொண்ட பெருமானை வணங்கினான்; அங்கே பெற்ற பூமாலையைத் தோளுக்கு அணியாகக் கொண்ட சேரன் நால்வகைச் சேனையோடும் வஞ்சி மாநகரைவிட்டு வடதிசை நோக்கிச் சென்றான்; இடையிடையே சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த பாடி வீடுகளில் தங்கினான்; மலையும் நதியும் கடந்து பகைவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/22&oldid=878457" இலிருந்து மீள்விக்கப்பட்டது