பக்கம்:தமிழ் விருந்து.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமிழ் விருந்து என்று தமிழரது வீரத்தைப் பாடினார் பாரதியார் தமிழர்கள் என்றும் படைக்கு முந்துவர். இன்று நிகழ்ந்து வரும் பெரும் போரிலும் தமிழ்நாட்டு வீரர் பல்லாயிரவர் படையிற் சேர்ந்து, பாலைவனங்களிலும் காடுகளிலும் வீரப் போர் புரிந்து, தமிழ்நாட்டின் பழம் பெருமையை விளக்கி வருகின்றார்கள். பாரத நாட்டின் படைக்கரம் என்று கருதப்படுகின்ற பாஞ்சால நாட்டு வீரரினும் தமிழ் நாட்டு வீரர்கள் எவ்வாற்றானும் குறைந்தவர் அல்லர் என்பது காலம் செல்லச்செல்ல எல்லோர்க்கும் இனிது விளங்கும். 3. போர்க்களங்கள் இவ் வுலகத்தில் போர் இல்லாத இடமே இல்லை. காட்டிலே விலங்கொடு விலங்கு போராடுகின்றது. எளிய விலங்கை வலிய விலங்கு கொல்லுகின்றது. நீரிலே மீனோடு மீன் போராடுகின்றது. சிறிய மீன் பெரிய மீனுக்கு இரையாகின்றது. நாட்டிலே அரசும் அரகம் போராடுகின்றன; எளியவர் நாட்டை வலியவர் கவர்ந்து ஆளுகின்றனர். படை வலிமையுடைய நாடே சிறந்த நாடாக இன்று மதிக்கப்படுகின்றது. முற்காலத்தில் தமிழ்நாட்டில் வீரர்கள் மலிந்திருந்தார்கள். அன்னார், 'உச்சி மீது வான்இடிந்து வீழு கின்ற போதினும் அச்ச மில்லை அச்ச மில்லை அச்ச மென்ப தில்லையே” என்று பாடிக்கொண்டு போர்க்களம் செல்லும் பான்மையாளர். ஆண்களும் பெண்களும் வீரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/24&oldid=878460" இலிருந்து மீள்விக்கப்பட்டது