பக்கம்:தமிழ் விருந்து.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பதிப்பு : 1945 பதினான்காம் பதிப்பு : 1998 பதினைந்தாம் பதிப்பு : 2007 விலை : ரூ. 40-00 HSBN: 978-8-8379-404-6 முகவுரை இலக்கியப் பசி இப்பொழுது தமிழ் நாட்டிற் பரவி வருகின்றது. பசி மிகுந்தவர் எளிய உணவையும் இனிய விருந்தாகக் கொள்வர். அந்த வகையில் வந்தது இத் தமிழ் விருந்து. தமிழ்க் கலைகளின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை -இவை நான்கு கூறுகளாக இந் நூலிற் காணப்படும். சென்னையிலும், திருச்சிராப்பள்ளியிலும் உள்ள வானொலி நிலையத்தில் நான் பேசிய பதினெட்டுப் பேச்சுகள் இந் நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைச் சேர்த்துக் கொள்ள அனுமதி தந்த இருநிலையத்தார்க் கும், இந் நூலை வெளியிடுவதற்கு அனுமதி யளித்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க் கும் எனது நன்றி உரியதாகும். சென்னை, 19-9-'45. - ரா.பி. சேதுப்பிள்ளை ஏஷியன் அச்சகம், சென்னை - 600 014.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/4&oldid=878492" இலிருந்து மீள்விக்கப்பட்டது