பக்கம்:தமிழ் விருந்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைச்சுவை 73 கண்ணுடைய பிள்ளை எதிர்க்கேள்வி போட்டான். 'விநாயகா ! நீ ஏனடா அப்படி விகடம் செய்தாய்? என்று வினவினார் தந்தை, 'அவன் என் தும்பிக் கையைப் பிடித்து முழம்போட்டு அளந்தானப்பா' என்றான் மூத்த பிள்ளை. குறும்பு செய்த முருகன் சிரித்துக்கொண்டு நின்றான். அங்கும் இங்கும் பார்த்தார் பரமசிவன். ஒரு பிள்ளையையும் குறை சொல்லத் தோன்றவில்லை. பெற்றவளை நோக்கி, உன் அருமைப் பிள்ளைகளைப் பார்' என்று ஏளனம் பேசினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவனடியார் ஒருவர் இப் பிள்ளைச் சண்டையைப் பெரிய பாட்டாகப் பாடி விட்டார் : "அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான் ஐயனன் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும் அத்தன்வே லவனை நோக்கி விரைவுடன் வினவவே அண்ணன்என் விளங்குகண் எண்ணினன்என வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து, நீ அப்படி விகடமேன் செய்தாய்என மருவும்என் கைந்நீள முழமளந் தானென்ன மயிலவன் நகைத்து நிற்க மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கிநின் மைந்தர்ைப் பாராய்எனக் கருதரிய கடலாடை உலகு.பல அண்டம் கருப்பமாய்ப் பெற்றகன்னி கணபதியை யருகழைத்து அகமகிழ்வு கொண்டனள் களிப்புடன் உமைகாக்கவே." என்பது அவர் பாடிய பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/75&oldid=878569" இலிருந்து மீள்விக்கப்பட்டது