பக்கம்:தமிழ் விருந்து.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தமிழ் விருந்து சூர்ப்பநகை பஞ்சவடிச் சாலையில் இராம லட்சுமணர் களைக் கண்டு காதல் கொண்டாள்; அவர்களை அடைவதற்குச் சிதை இடையூறாக இருந்தாள் என்று எண்ணிச் சமயம் பார்த்து அவளை அப்புறப்படுத்த முயன்றாள்; அப்போது மறைவில் இருந்த இலட்சுமணன் வெளிப்பட்டு, அரக்கியின் மூக்கை வாளால் அறுத்தான். மானம் அழிந்தாலும் சூர்ப்பநகையின் மையல் ஒழிந்தபாடில்லை. அறுத்த புண் ஆறுவதற்கு முன்னே மலர்ந்த முகத்தோடு வீரரிடம் வந்தாள். அவர்கள் முன்னே நாணிக் கோணி நின்று கொண்டு பேசத் தொடங்கினாள் : "வீரரே ! நீங்கள் என் மூக்கை ஒட்ட அறுத்தீர்கள். அதன் கருத்து எனக்கு நன்றாய் விளங்கிவிட்டது. இவள் மூக்கை யறுத்து விட்டால் வெளியே எங்கும் போகமாட்டாள்; வேறுள்ள ஆடவர் எவரும் இவளை விரும்பிப் பார்க்க மாட்டார்; நம்மருகே எப்போதும் இருப்பாள் என்ற ஆசையால் அறுத்தீர்கள். உங்கள் கருத்தை யறிந்தேன்; முன்னிலும் அதிகமாக உங்களிடம் காதல் கொண்டேன்" என்றாள். "பொன்னுருவப் பொருகழலீர் புழைகான மூக்கரிவான் பொருள் வேறுண்டோ இன்னுருவம் இதுகொண்டு இங்கு இருந்தொழியும் நம்மருங்கே ஏகாள் அப்பால் பின்னிவளை அயலொருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழைசெய்தீரோ அன்னதனை அறிந்தன்றோ அன்பிரட்டி பூண்டதுநான் அறிகிலேனோ” என்ற கம்பர் பாட்டில் மானத்தையும் கடந்த மையலைக் கண்டு நாம் நகைக்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/78&oldid=878574" இலிருந்து மீள்விக்கப்பட்டது