பக்கம்:தமிழ் விருந்து.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 தமிழ் விருந்து வழங்கலாயினர். அம் மலையின் நீர்மையைக் கம்பர் நன்றாகக் கூறுகின்றார் : "வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாகி நான்மறையும் மற்றை நூலும் இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக் கீறாய் வேறு புடைசுற்றும் துணையின்றிப் புகழ்பொதிந்த மெய்யேபோல் பூத்து நின்ற உடைகற்றும் தண்சாரல் ஓங்கியவேங் கடத்திற்சென்று உறுதிர் மாதோ' என்பது கம்பர் கவி. திருப்பதி மலைக்குத் தெற்கே வாழ்ந்த தமிழரைத் தெலுங்கர், அருவர் என்று அழைத்தார்கள். நாளடை வில் அருவர் என்பது சிதைந்து அரவர் என்றாயிற்று. அரவம் என்பது தமிழுக்குப் பெயராய் அமைந்தது. அருவர் என்ற பெயர் எவ்வாறு தமிழரைக் குறிப்ப தாயிற்று என்பதைச் சிறிது ஆராய்வோம். இப்பொழுது ஆர்க்காடு என்று வழங்கப்படும் நாடு முற்காலத்தில் அருவா நாடு என்ற பெயரைப் பெற்றிருந்தது. அருவா நாட்டில் வாழ்ந்தவர்கள் அருவர் எனப்பட்டார்கள். அவர்கள் பேசிய மொழி தமிழ். அருவர் வாழ்ந்த நாடு ஆந்திர தேசத்தை அடுத்திருந்தமையால் அருவரை ஆந்திரர் நன்கறிந்திருந்தார்கள். அருவர் தமிழர் ஆதலால், தமிழர் எல்லோரையும் ஆந்திர நாட்டார் அருவர் என்று அழைக்கலாயினர். இவ் வுண்மை கலிங்கத்துப் பரணி என்னும் தமிழ் இலக்கியத்தால் அறியப்படும். தெலுங்கு தேசத்திலுள்ள கலிங்க நாட்டில் தமிழ்ச் சேனைக்கும் கலிங்கப்படைக்கும் நடந்த பெரும்போர் கலிங்கத்துப்பரணியில் புனைந்து உரைக்கப்படுகின்றது. தமிழ்ச் சேனையைக் கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/80&oldid=878578" இலிருந்து மீள்விக்கப்பட்டது