பக்கம்:தமிழ் விருந்து.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும் 83 ஒருவன் பொதிய மலையிலுள்ள அகத்தியர் ஆணைப்படி அவ்வணையைக் கட்டி முடித்தான் என்பது கர்ண பரம்பரைக் கதை அணைக்கட்டிலிருந்து ஆற்று நீரைக் கவர்ந்து பாசனத்திற்குப் பயன்படுத்தும் கால்வாயும் 'கன்னடியன் கால்' என்று பெயர் பெற்றுள்ளது. く 。 இனி, தமிழ் நாட்டினின்று சிறு கடலால் பிரிக்கப்பட்டுள்ள இலங்கை என்னும் சிங்கள தேசத்தைப் பார்ப்போம் : இலங்கையை ஈழநாடு என்பர் தமிழர் சங்க இலக்கியங்களிலும், தேவாரத் திருப்பாசுரங்களிலும் இலங்கை ஈழநாடென்றே குறிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் பண்டைக் கால முதல் போக்குவரவு உண்டு; ஏற்றுமதியும் இறக்குமதியும் உண்டு, தமிழ் நாட்டார் பெருந்தொகையினராக இலங்கையிற் சென்று குடியேறினர்; வளம் பெருக்கினர். இன்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் தமிழ் மாகாணமாகவே திகழ்கின்றது. அங்கு வாழ்பவர் பெரும்பாலும் தமிழரே. 'யாழ்ப்பாணம் என்பது நல்ல தமிழ்ப் பெயர். அப் பெயரின் வரலாறு அறியத் தக்கதாகும். தமிழ் நாட்டுப் பழங்குடிகளில் பாணர்' என்பார் ஒரு வகுப்பார். பண்ணோடு பாட வல்லவர் பாணர் என்று பெயர் பெற்றார் என்பர். வைணவ சமய ஆழ்வார்களுள் ஒருவராகிய திருப்பாணாழ்வார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் குலத்தில் யாழ்ப்பாணர் ஒரு பிரிவினர். இன்னிசைக் கருவியாகிய யாழைக் கையிலேந்திப் பாடிய பாணர் யாழ்ப்பாணர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/85&oldid=878588" இலிருந்து மீள்விக்கப்பட்டது