பக்கம்:தமிழ் விருந்து.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - தமிழ் விகுந்து கருது செம்பொனின் அம்ப லத்திலோர் கடவுள் நின்று நடிக்குமே காவி ரித்திரு நதியி லேஒரு கருணை மாமுகில் துயிலுமே தருவு யர்ந்திடு புதுவை யம்பதி தங்கு மானிய சேகரன் சங்க ரன்தரு சடையன் என்றொரு தரும தேவதை வாழவே" என்ற பாட்டு, கண்டியரசன் மனத்திலெழுந்த நன்றியை நன்றாக எடுத்துக் காட்டுகின்றது. இதுகாறும் கூறியவற்றால் தமிழ் நாட்டார் அன்று முதல் இன்றுவரை அயல் நாட்டார்களோடு பழகிவரும் பான்மை ஒருவாறு விளங்குவதாகும். 12. தமிழ் மொழியும் பிற மொழியும் - தெலுங்கு பாரத நாட்டிலே பற்பல தேசங்கள் உண்டு. தேசந்தோறும் பாஷை வேறு. ஆயினும் அவற்றை இருகூறாக வகுக்கலாம். வட இந்தியாவில் வழங்கும் மொழிகள் ஒரு வகை, தென் இந்தியாவில் வழங்கும் மொழிகள் மற்றொரு வகை. வட நாட்டு மொழிகளை ஆரிய மொழிகள் என்றும், தென்னாட்டு மொழிகளைத் திராவிட மொழிகள் என்றும் கூறுவர். திராவிட வகையைச் சேர்ந்த தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துளுவும், தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்று வாதிப்பார் சிலர். இக் கருத்தைத் திருத்தமாக வெளியிட்டார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. “பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும்ஒர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும்துளுவும் உன்உதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/88&oldid=878594" இலிருந்து மீள்விக்கப்பட்டது