உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

186 கவர்னர்கள் உணர மறுப்பர். கவிதை தீட்டியோரும் அக் கருத்தினை வலியுத்திக்கூற விரும்பார். பள்ளியின், பொறுப் பாளர்களும், பாடலின் பொருள் அறிந்தல்ல அதைத் தேர்ந் தெடுத்தது-ஆனால், தம்பி, நமக்கெல்லாம், அந்தச்செய்தியைப் பார்க்கும்போது, "என்ன பொருத்தம்! என்ன பொருத்தம்! "வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு!' என்ற பாடலை, வந்தமர்ந்து கோலோச்சும் கவர்னர் எதிரே பாடிக் காட்டினரே, எவ்வளவு அருமை!எத்துணைத் திறமை!” என்று எண்ணிப் பூரித்திடச் செய்கிறது. வளமிருந்தும், எழில் நிரம்பியும் வரலாற்றுச் சுவடியில் நல்லிடம் பெற்றும் உள்ள நம்நாடு, வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு-என்ற உண்மையை மட்டும், நாட் டின் பிரச்சினைகளிலே நல்லார்வம் காட்டும் இளைஞர்கள் உணர்ந்துகொண்டு விடுவார்களானால்...! தேனென இனிக்கி றது. தம்பி, நாம் செய்ய வேண்டிய பணி, இதுநாள் வரை இதனை உணராதிருப்பவரெல்லாம், இந்த உண்மையை உண ரச் செய்வதுதான்! ஓரளவுக்கு நமது முயற்சி வெற்றிபெற்றுக் கொண்டு வருகிறது - இல்லையானால், ஏமாற்றமும் மனச்சோர் வும் நம்மை எல்லாம் மண்ணாக்கி விட்டிருக்குமே! தமது முயற்சி வெற்றி பெறுவது கண்டு மனம் புழுங்குவோர், நமது மூக்கினைச் சொரிந்துவிடவும், தமது நாக்கினைத் தீட்டிக் கொண்டு நம்மை நிந்திக்கவும் முற்படுகிறார்களல்லவா? தம்பி, நாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு அறி குறிகள் அவை. நம் நாடு - திரு இடம்- இன்று 'வடவருக்கு' பல்வேறு துறைகளிலும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது, என்ற பொது உண்மையை நாட்டவரில் மிகப்பெரும் அளவினர் உணர்ந்து கொண்டுவிட்டனர்; சிலர் திகைப்புற்றுக் கிடக்கின்றனர்; வேறு சிலர் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாமலிருக் கும் வரையில் மனதுக்கு அமைதி இருக்கும். பிறகுபுயலல்லவா புகும், நமக்கேன் வீண்வேலை என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள்; ஆர்வமுள்ளவர்களோ, அடிமைத்தனத்தின் பொருளைக் கண் டறிந்து விளக்கும் அரும்பணியில் ஈடுபட்டபடி உள்ளனர். ஒரு தம்பி, இதை எனக்கு அனுப்பி, வடநாட்டு ஆதிக்கம் எப்படி எப்படி வடிவமெடுத்திருக்கிறது பார், அண்ணா! என்று கூறுகிறார். "இந்திய உபகண்டத்தின் பெருமளவு உற்பத்தியில் ஓரளவு பெரிய பங்கு பெற்றிருப்பது காகிதத் தொழிலாகும். காகிதத் தொழிலின் முடிசூடா மன்னர்களாக இன்றைய நிலையில் காணப்படுவது - ஆளுகை நடத்துவது வடநாட்டுப் பெரு முதலாளிகளே.