உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

199 காஞ்சீபுரத்தில் மட்டும் பண்டிதரின் பவனி பாங்கான முறையில் அமையவேண்டும் என்பதற்காக ஏறத்தாழ முப்பதினாயிரம் ரூபாய் செலவிடத் திட்டம் என்கிறார்கள். ஒரு தலைவரின் வருகைக்காக இவ்வளவு ஆர்ப்பாட்டமா, இத்துணைப் பெருஞ் செலவா, இருண்ட தெருக்களும், நாற்ற மடிக்கும் சேரிகளும் இருக்க, அவைகளைச் செப்பனிட்டு ஒளி தர முன்வராத ஆட்சியாளர்கள், பண்டிதரின் பவனிக்காகப் பாதைகளைச் செப்பனிடுவதற்கும் எழிலனிப்பதற்கும் இவ்வ ளவு பெரும்செலவு செய்யத்தான் வேண்டுமா? இல்லாமை யும், போதாமையும் நெளியும் நாட்டிலேயா இப்படி? பாலின்றி அழும் பச்சிளங் குழந்தையைக் கதறக் கதறத் தொட்டிலில் கிடத்திவிட்டு, பன்னீரில் குளித்திடப் பளிங்கா லான திருக்குளம் செல்லும் தாய், உண்டா? - என்றெல்லாம் கேட்டுப் பண்டிதருக்குப் அளிக்கப்படும் ராஜோபசாரத்தின் பொருட்டுப் பெருந்தொகை செலவிடப்படுவதை கண்டிக்கவில்லை! பண்டிதருக்கு வைபவம் நடத்தும் சாக்கி லாவது, இதுவரை ஏறெடுத்துப் பாராமலிருந்த பாதைகளைச் செப்பனிடவும் பாங்கு அளிக்கவும் முன்வந்தனரே, என்று மகிழவும் செய்கிறேன். நான் "ஏன் இவ்வளவு செலவு?' என்று கேட்டால், தம்பி! காங்கிரஸ்காரர்கள் கடும் கோபம் காட்டி, இங்குள்ள பாதை களைச் செப்பனிட்டோம், பண்டிதரின் பெட்டிக்கா பணம் போய்ச் சேருகிறது, நமது நகர்களின் சீருக்குத்தானே செல விடப்படுகிறது, அறிவிலிகாள்! இதனையுமா அறிந்தீர் இல்லை, என்ன மதியற்ற தன்மை! என்று கூறிக் கண்டிப்பர். வெள்ளைக்கார ஆட்சிக் காலத்தின்போது, கவர்னர், வைசிராய், ஆகியோர், இதுபோல விஜயம்' செய்வர். அப் போதெல்லாம், இதுபோலத்தான் பெரும் பணம் செலவிட்டு, பூசி மெழுகியும் புதுக் கோலம் காட்டியும்,பாதைகள் அமைத் தும், பாங்கினைச் சமைத்தும் காட்டுவர். திருவிழாக்கோலம் எழும்! அந்தச் சமயத்திலெல்லாம், கிளர்ச்சிக்காரர்களாக இருந்த கரங்கிரஸ்காரர்கள், ஆடம்பரத்தைக் கண்டீரா? அக்கிரமத்தைக் கேளீரோ? கவர்னர் வருகிறானாம் பணம் பாழாகிறது! பரங்கி வருகிறான், பாதையைச் செப்பனிடுகிறார்கள். ஒரு தனி மனிதன் விஜயத்துக்குப் பணம் தண்ணீர் பட்ட பாடாகிறது, தர்மமா! கேட்பார் இல்லையா? நம்மைப்போன்ற மனிதன், தேவனல்ல! அவன் வருகிறான் என்றதும், ஏன் இந்தப் பரபரப்பு, எதற்காகப் படாடோபம்!