உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

கடிதம்: 21 தம்பி, உலாவும் ஊழலும்! ஈஜிப்ட் நாட்டுப் போர்க்கருவி விற்பனை முறையில் ஏமாற்றுதல் - இந்திய அரசின் தொழில்துறை ஊழல் - கணக்காய்வாளர் காட்டும் பல் அரசு ஊழல்கள். ஒரு 'போர்க்களம்' காணலாம், புறப்படு. காணமட்டுமா?என்ன அண்ணா! இது! என்னை என்னகட்கம் ஏந்தத் தெரியாவன், கடும் போருக்கு ஏற்றவனல்ல என்றா எண்ணிக்கொண்டாய்? மாற்றான் முன் மண்டியிடும் பரம் பரையினனா? மறத்தமிழனன்றோ! என்றெல்லாம் கேட்டு விடாதே, நான் உன்னை, முடிந்துபோன போர் பற்றிய 'செய்தி'யைக் கேட்கச் சொல்கிறேன் - நீ ‘போர் முரசு' கேட்கிறது எண்றெண்ணி ஆர்த்தெழுந்துவிடாதே. ஒரு களம் --இருதரப்புப் படைகள், எதிர் எதிர்! "துப்பாக்கிகள் தயாரா? தோட்டாக்களைப்பொருத்தி விட்டீர்களா? 'குதிரை'யைச் சரிபார்த்துக் கொண்டாகி விட்டதா? சரி! ஏறு! முன்னேறு! ஏறு, முன்னேறு! தாக்கு! உம், தாமதம் ஏன்? தாக்கு!! சுடு! வேகமாக! படைத் தலைவன் இதுபோலக் கட்டளை' பிறப்பித்து விட் டான். படைகள், பாய்ந்தன எதிரியை நோக்கி. வேட்டுகள் கிளம்பின? துப்பாக்கிகள், பீரங்கிகள் முழக்கமிட்டன! எதிரிப்படை கிளம்பிற்று! வரிசையிலிருந்து, ஏளனச் சிரிப்பொலி வேட்டுகள் கிளம்புகின்றன! தோட்டாக்கள் பறக்கின் றன? துப்பாக்கிகள் முழக்கமிடுகின்றன! படை பாய்ந்து முன் னேறுகிறது! எதிரிப் படையோ, 'கெக்கலி' செய்கிறது, கை கொட்டிச் சிரிக்கிறது!! ஏன் தெரியுமா, தம்பி! துப்பாக்கி சுடு கிறது, ஆனால் ஆளைச் சாகடிக்க மறுக்கிறது! வேட்டுகள் கிளம்பிவேகமாகப்பாய்கின்றன, ஆனால் யாரையும்பிணமாக்க மறுக்கின்றன.அழிவுக் கருவிகள், 'அஹிம்சா' விரதம்பூண்டு விட்டன? வாண வேடிக்கை போன்ற சத்தம் கேட்கிறதே