உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

கொடுத்திருப்பது கூறுகிறது. 214 கண்டிக்கத்தக்க தென்றும், கமிட்டி கொள்ளை போகிறது பணம் இவ்வண்ணம்; கோட்டை மீதேறிப் பேச வருகிறார் கோமான், நாற்றமடிக்கிறது ஊழல், நாட்டிலே பவனி வருகிறார் நேரு பண்டிதர். 1-9-55-ல், கணக்கு ஆய்வாளர்கள், ரயில்வேதானியக் கடையில் நிர்வாக ஊழலின் விளைவாக ஆறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை எடுத்துக் காட்டினர்.-நேரு என்ன செய்தார்? சோவியத் நாட்டிலே தான் கண்ட சோபிதத்தை எடுத்துரைத்தார் - வாயைப் பிளந்துகொண்டு மக்கள் கேட் டுக் கொண்டிருந்தனர் - ஊழல் நிர்வாகத்தின் பொறுப்பாளர் கள், கண்ணைச் சிமிட்டிக்கொண்டு, புன்னகை செய்தனர். தானியம் வாங்கிய விலை 11 கோடி. விற்பனையானது 5 கோடி ரூபாய்க்கு; ஆறு கோடி நஷ்டம். ஆறு கோடி நஷ்டமா, அனியாயம், அனியாயம் என்று பேச்சு எழுந்ததும்,பண்டிதர்,பாரெல்லாம் பஞ்ச சீலம் எனும் கொள்கையை வரவேற்பது பற்றிப் பேசலானார். 4000 ரூபாய் பெறுமானமுள்ள ஓட்டை விமானத்தை மெருகு கொடுத்து 1,60,000 ரூபாய்க்கு விற்பனை செய்த துடன், பழுது பார்த்த செலவு, டைரக்டர் ஊதியம் என்று பல புள்ளிகள் கொடுத்து பெரும் தொகையைப் பெற்றுக் கொண் டது,விமானக் கம்பெனி, சர்க்கார் விமானத் தொழிலை தேசீயமயமாக்கிய போது. தம்பி, பெரிய விஷயங்களிலே தான் 'கோட்டை' விடு கிறார்கள் என்று எண்ணிக் கொள்ளாதே -மிகமிகச் சாமான் யர்கள்கூட ஏமாறாத விஷயத்திலெல்லாம், 'சர்வதேசப் புகழ் பெற்ற நேரு சர்க்கார்' எளிதாக ஏமாறுகிறது. குடி இருந்து கொண்டு வாடகை தராமலிருப்பது அக்ர மம்; வாடகை வசூலிக்காமலிருப்பது ஏமாளித்தனம்! அல்லவா? கிறது! நேரு சர்க்கார், குடி இல்லாமலே வாடகை செலுத்து இதைக் கண்டிக்க எனக்கு வார்த்தை தெரியவில்லை - காங்கிரஸ் நண்பர்களையே கேட்டுத் தெரிந்துகொள்! 4,60,000 ரூபாய் வாடகை செலுத்தியிருக்கிறது சர்க்காருடைய தபால் தந்தி இலாகா - கல்கத்தாவில் இரண்டு கட்டிடங்களுக்கு.