உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

218 தினால் அவ்விதம் பாடுகிறான் என்று பொருள்கொள்வார் உண்டா! அதுபோல, வீரமூட்ட, இதுபோல ஆரியராவது மண்ணாங்கட்டியாவது? நடுவீதியில் அடித்தாலும் கேட்க நாதி ஏது என்று பேசுவதன்மூலம், சமூகத்தில் தன்னம் பிக்கை அற்று, தாசர் நிலைபெற்று, எடுப்பார் கைப்பிள்ளை யாய், ஏவல்புரிபவராய், எடுபிடியாய்க் கிடப்பவர்களின் உள்ளத்தில் வீரம் முளைத்திடச் செய்யலாம் என்பதற்காகக் கூறி இருக்கக் கூடும். அல்லது, ஆரியர் உண்மையிலேயே பெற்றிருக்கும் செல்வாக்கும் வலிவும் வளருவது கண்டு அச்சப்பட்டு, வீரதீரமாகப் பேசி அந்த அச்சத்தை மறைத் துக் கொள்வதற்கும் இந்த முறை கையாளப்பட்டிருக்கக் கூடும்; இவ்விதமாகக்கூட இல்லாமல், ஏதோ இன்றைய "அயிடம் அது, காரசாரமாக இருக்கிறதா இல்லையா பார்த் துக்கொள் என்ற போக்கிலே எழுதப்பட்டுமிருக்கலாம்; எக் காரணம் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், நாடாளும் காங் கிரஸ் தலைவர்களுடைய போக்கைக் கவனிக்கும்போது, இந்த வீராவேசப் பேச்சுத் துளியும் பொருந்துவதாகக் காணோம். நாதியில்லை! என்று துந்துபி முழக்கம் கேட்கிறது! ஆரியர் தாக்கப்பட்டாலும் கேட்க நாதி இல்லை என்று முழக்க மிடும் நேரத்தில், 'சென்னை ராஜ்ய சர்க்கார்' என்ன செய் கிறது. தம்பி ! கவனித்தாயா? ஆரியரின் மனதிலே ஒரு துளி சஞ்சலம், முகத்திலே ஒரு சிறு கோபக்குறி, பேச்சிலே ஒரு விதமான வருத்தம் தெரிந்ததும், கிடுகிடுவென ஆடி முகத் தைத் துடைக்கவும், முகமன் கூறவும், ஐயா! வருந்தற்க! பிழை பொறுத்திடுக! தவறு ஏற்பட்டிருந்தால், எடுத்து இயம் பிடுக! ஏற்ற முறையில் கழுவாய் தேடிக்கொள்ளக் காத்துக் கிடக்கிறோம்! உமது உள்ளத்தில் ஒரு துளி வேதனை தோன்றினாலும் உலகம் தாங்காதே! கோபம்கொண்டு ஐயன் மீர்! எம்மீது சாபத்தை வீசாதீர்! சரணம் ஐயா! சரணம்!- என்று கெஞ்சிக் கூத்தாட முன் வருகிறது. விடுதலையார் கூறுகிறார் வீதியில் போட்டு அடித்தாலும் ஆரியருக்காகப் பரிந்து பேச நாதி இல்லை என்று. நாடாளும் தலைவர்களோ, நான், நீ, என்று போட்டி போட்டுக்கொண்டு முன் வருகிறார் கள், ஆரியரின் முகக் கோணலைப் போக்க; மனவருத்தத்தை நீக்க!! ஆரியர், அடித்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்று சமூகமே முடிவு கட்டிவிட்டது என்ற பொருள்பட அன்பர் எழுதுகிறார்; அவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திர மான தலைவர்களோ, 'தாசானு தாசர்' களாகி, ஆரியரின் தயவுக்குத் தவம் கிடக்கும் போக்கினராக உள்ளனர்!