உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

105 வராவிட்டாலா! அழைத்தும் வரவில்லை, அற்பர்கள் என்று எப்போதும் ஏசுவோர் ஏசுவர்? (9) வருவதானால்? வந்தார்கள் - என் திட்டத்தின் படி கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்! வேறு வழி, இதுகளுக்கு? என்று குத்தல் பேச்சு கிளம்பும். அவ்விதமாக இந்தி எழுத்து அழிப்புப் போரில் ஈடுபட்டபோது ஏசினர் என்று துணைச்செயலாளர் துயரத்துடன் கூறுகிறார். (10) அப்படியானால் என்ன செய்யலாம்? நமது அதென்ன என்னைக் கேட்கிறாயே! உனக்கென்று ஒரு கட்சி இருக்கிறது - அது அழைக்கப்பட வில்லை - ஒரு பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் அவரை அழைக்கக் காணோம் - வேறொர் கட்சி, தன் நிர்வாகக் கமிட்டியில், தனக்கு சரியென்று பட்ட ஒரு திட்டத்தை நிறைவேற்றி கிளர்ச்சி துவக்குகிறது- நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறாயே - நீதான் சொல்லேன்-! (II) அப்படியானால் போர் நடைபெறப் போகிறது-இதிலே நாங்கள் காட்டப்போகும் அபாரமான ஆற்றலையும். அடையப் போகும் வெற்றியையும். அறிவிலிகாள்! ஆற்றலற்றது காள்; காண்மின், காண்மின்!-என்று கூறிவிட்டுக் களம் செல்லும் கர்ம வீரர்களைக் காண நேரிட்டால், நான் கைகூப்பித் தொழுவேன்! போர் நடைபெறப் போகிறது --அதன் நோக்கம் இது - முறை இவ்விதம் இருக்கும்-இதிலே கலந்து பணி யாற்ற வருவாயா, உனக்கு இந்த நோக்கமும் முறையும் புரிகிறதா,பிடிக்கிறதா என்று கேட்டால் கைகூப்பித் தொழுவது மட்டுமல்ல காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு, இது தான் கண்ணியமான முறை, காரிய சித் திக்கு ஏற்ற வழி, பகைவர் கண்டு திடுக்கிடத்தக்க வகை யான திட்டம், போர் முறை பற்றிக் கலந்து பேசுவோம். என்று கூறி, ஆர்வத்துடன் பணிமனையில் நுழைவேன். இருவிதமுமின்றி, போர் போர்! போரிடும் ஆற்ற லுள்ளவர்களெல்லாம், வரலாம்! வருவோர் சேர்த்துக் கொள்ளப்படுவர் - விளக்கம் கேட்போர். கலந்துரை யாட வேண்டுமென்று கூறிடும் துணிவு கொண்டோர் தேவைப்படார். கலந்து கொள்ளாதவர்கள், ஈனப்பிறவி கள். நாட்டுத் துரோகிகள் - அவர்கள் அழிக, அழிக, அடியோடு அழிந்துபடுக! என்று சபித்துக் கொட்டினால், நான் என்ன செய்ய முடியும். நீயும்தான் என்ன செய்ய முடியும். அ.க-7