உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

கடிதம்: 12. தம்பி, சிறை அனுபவங்கள் அபிதான சிந்தாமணி படித்தமை -- பெரியாரின் அன்பு --குஞ்சிதம் குருசாமியின் பாசம் உச்சி முதல் உள்ளங்கால்வரை ஒரே புளகாங்கிதமடைய லாம் -- வீரத் தமிழனின் பழைய வரலாறு மீண்டும் ஓர் முறை காணும் வாய்ப்பு நேரிடும், கோட்டை கொத்தளங்கள் தூளா கும், கொடிமரங்கள் பெயர்த்தெறியப்படும், முரசு கொட்டு வர், சங்கம் ஊதுவர், பாவாணர் வெற்றிப் பண் இசைப்பர், திருமதிகள் (திருஷ்டி கழிப்பர்,மக்கள் தெந்தினம் பாடுவர், ஆகஸ்டுப் போரின் அலாதியான அருமை கண்டு என்று எவ் வளவோ மனப்பால் குடித்தேன். இப்படி ஒரேயடியாக என்னையும் அவரை நம்பிக் கிடக்கும் ஆயிரம் ஆயிரம் வீரர் களையும் நட்டாற்றில் விட்டுவிடுவார் என்று துளியும் எண்ண வில்லை; எனினும், என்ன செய்வது,தோழர் ம, பொ சிவ ஞானம் அவர்கள் தமது ஆகஸ்டுப் போராட்டத்தை நிறுத்தி விட்டார். என்னைக்கூடச் சேர்த்துக்கொள்வதாகச் சொன்னார்- அழைப்பு வருமென்று எதிர்பார்க்க வேண்டாம், சேருக ! சீர் பெறுக! என்றார் நானும் நீயும் சேர்ந்தாலும் சேராவிட்டா லும் அவர் கூறிடும் எல்லைப்போர் நடைபெறட்டும், தமிழரின் தொல்லை ஒன்றுக்கு முடிவு தெரியட்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பிடிமண் அள்ளிப் போட்டு விட்டார், செங்கோலார். தக்க காரணம் உண்டு கேண்மினோ! என்றும் அறிக்கை விடுகிறார். நேருபண்டிதரிடமிருந்து அவருக்குக் கடிதம் வந்திருக்கிற தாம் - கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று என்னைக் கேட்காதே தம்பி, அவரே கூறவில்லை. இரகசியம் இருக்கு மல்லவா! பாரதத்தின் தலைவரும் தமிழ்மாநிலத்தின் தலை வரும் நடத்திக்கொள்ளும் கடிதப் போக்குவரத்து என்ன சாதாரணமாகவா இருக்கும், நம்மைப் போன்ற சாமான்யர் களுக்குக் கூற! ஏதேதோ இருக்கும். நேரு பண்டிதர் கெஞ்சி இருக்கக் கூடும்-கொஞ்சி இருக்கக் கூடும்-- எல்