உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

114 துறையிலே துவக்கக் கட்டத்தில் எனக்குற்ற தோழராக இருந்தவர் - அவரே ஒரு அபிதான சிந்தாமணி- மணிக் கணக்கில் பேசிக்கொண்டே இருப்போம், பலபல விஷயங் களைக் குறித்து. எல்லா விஷயங்களைப் பற்றியும் ஏதேனும் ஓரளவுக்குக் கூறும் வகையானகல்வியும் கேள்வியும்படைத்த வர் - எனவே அவர் சிறையில் என்னோடு இருப்பதுபோலவே எனக்குத் தோன்றிற்று அபிதான சிந்தாமணியைப் படிக்கும் போதெல்லாம். அந்த ‘அபிதான சிந்தாமணி'யை நான் மறப்பதற்கில்லை. இப்போதும் 'அபிதான சிந்தாமணி'யைக் காணும்போதெல்லாம், எனக்கு அந்த நாலு மாதக் கடுங்கா வல் நினைவிற்கு வரும் ; நினைவிலே அந்தச் சம்பவம் தோன்றியதும், எனக்குள்ளாகவே ஓர் மகிழ்ச்சி, கொள்கை! கொள்கை! என்று கொக்கரித்துக்கொண்டிருந்துவிட்டு, அடக்குமுறை கிளம்பியதும் ஓடி விடும் 'கோழை உள்ளம் இல்லை. அழைத்தார்கள் அறப்போரில் ஈடுபட்டான், சிறைத் தண்டனை பெற்றான், என்று எவ்வளவு குரோத எண்ணம் கொண்டவர்களும ஒரு சமயமில்லாவிட்டாலும் மற்றோர் சமயம் சொல்லிக் கொள்வார்களல்லவா? முதல் சிறை அனு பவத்தின்மீது அபிதானசிந்தாமணி, இரண்டாவது முறை என்ன தெரியுமோ? கேளேன் அதையும். லாபனம் ஆச்சாரியார் கவர்னர் ஜெனரலாகிவிட்டார்; சென்னை வரு கிறார்பவனிக்காக;கூண்டோடு பிடிபட்டுச்சென் னைச்சிறையில் கொண்டுபோய் வைக்கப்பட்டிருந்தோம்--19+8 இல் நிர் வாகக் கமிட்டியினர் அவ்வளவு பேரும் - அதிகநாட்க ளில்லை - ஒரு வாரம்தான்! அதற்குள் ஆச்சாரியார் வந்தார், பவனி நடத்தினார், கருப்புக்கொடியை வெண்புறா பறக்கவிட் டுக் கொண்டு வானத்திலே வட்டமிடக் கண்டார், கட்டுக் காவல் பலமாக இருந்தும், அத்தனையையும் துளைத்துக் கொண்டு சென்று சிலர் கருப்புக்கொடி வீசிடக் கண்டார். நாங்கள் உள்ளே இருந்தோம். பெரியார் இருக்கிறார்; சம்பத்து அதுபோதுதான் ஆபத்தான டைபாய்டிலிருந்துவிடு பட்டு அவன் துணைவி கண்டு பரிதாபப்படத் தக்க (இப்போது பயப்படுவதாகக் கேள்வி! உருவம் கண்டு!) நிலையில் எலும் புக்கூடாக இருக்கிறான். மற்றும் பலர் எல்லோரும்; குடும்பம் முழுவதும்; இருமி இளைத்து ஈளைகட்டிய நிலையில் இருந்த நமது மனதுக்குகந்த அழகிரிசாமி அண்ணன் உட்பட. நானும் அழகிரி அவர்களும் அப்போது பக்கத்துப் பக்கத்து அறை.