உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

117 செல்ல நண்பர்கள் வெளியே 'முஸ்தீபுகள்' செய்யத் தொடங்கிவிட்டிருந்தனர். நமது கழகத்தார் முஸ்தீபுகளிலே மும்முரமாக ஈடுபட்டு, நேரத்தை மறந்துவிட்டனர்; எனவே, சிறைக்கதவு திறக்கப்பட்டு எங்களை வெளியே அனுப்பியதும், வாசற்படி அருகே, பெரியாரை அழைக்க வந்தவர்கள் கொண்டுவந்த ‘மோட்டார்' தான் இருந்தது.அதற்கு என்னை யும் அழைத்துச் சென்றனர்; இது போதாதென்று, போட்டோ' எடுப்பவர் ஒருவர் ஓடிவந்தார்-இருவரும் அப் படியே, நெருக்கமாக நில்லுங்கள் என்று, போட்டோ எடுப் பவர்களுக்கே உரித்தான சாமர்த்தியத்துடன்கூறி, போட் டோவும் எடுத்துவிட்டார், அது வெளியிடப்படவில்லை; வெளியிடாதிருந்தது நல்லது தான் என்றே சொல்லுவேன், அவ்வளவு திகைப்பு என் முகத்தில் இருந்தது, அவர் எப்படி இருந்தாரோ, எனக்குத் தெரியாது. வேதாசலம் அவர்கள் வீடுவரையில் சென்று, அவர் இறங்கிக்கொண்டார். நான் அதே மோட்டாரில் சாம்பு இல்லம் சென்றேன். கவனித்தாயா, தம்பி, எனக்கு ஏற்பட்ட இந்த அனு பவத்தை. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு தனி அமைப் புக்குப் பெரியதோர் ஆபத்து, இந்தப் பத்து நாட்கள் என்று நண்பரொருவர் கூறினார். உண்மைதான். நான் அவ்வளவு சுலபத்திலே மனதைக் கரையவிட்டு விடுபவன்தான்.ஆனால் பத்து நாட்கள் அவருடன் பேசி, மீண்டும் பழைய நேசத் தைப் பெறுவதற்கான வாய்ப்பு என்னைத் தட்டித்தட்டி அழைத்த போதும், நான் அந்தச் சபலத்துக்கு இடம் கொடுக் காமலிருந்தேன். காரணம் கிராதகன் என்பதல்ல, நான் ஒரு அமைப்புக்குப் பொறுப்பாளியாக்கப்பட்டு விட்டதால். நான் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும், அந்த அமைப்பை உருக்குலைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது என்ற நேர்மை யான எண்ணத்தினால்தான். நாலுசாக்லெட்! மும்முனைப் போராட்டத்திலே ஒரு நாள், எனக்கு நண்பர் குருசாமியுடன் சேர்ந்து சிறையில் இருக்கும் வாய்ப் புக் கிடைத்தது. அவர் சிறையில் கீழ்வரிசை அறையிலே தங்கியிருந்தார்-நான் தம்பிகளுடன் மேல் அறையில், மாடியில்! பார்! பார், இதிலே கூடக் கீழ்மேல் பேசுகிறான் என்று கூறிவிடப் போகிறார்கள். தம்பி,குருசாமிக்கு அப்போது உடல் நலம் இல்லை, எனவே மாடி ஏறவில்லை. அந்த ஒரே நாளில் எனக்குச் சுவையானதோர் அனுபவம்-அதையும் நான் மறப்பது இயலாது.