உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

121 விரும்புகிறவன். அப்படிக் கூறுவதால் போரே கூடாது என்ப வனல்ல; போரில் கலந்து கொள்ளாதவன் என்றோ போர் வாடை அடிக்கும்போது புதுடில்லிக்கு உத்யோக வேட்டைக்கு ஓடிவிட்டவனென்றோ பொருள் கொள்ளப் பொறுப்புள்ள யாரும் துணிமாட்டார்கள்-எதையும் துணிவுடன் கூறிடும் போக்கினர் பற்றி நான் பொருட்படுத்தப் போவதில்லை. காங்கிரஸ்காரர் மனதில், வேதனை, வெறுப்புணர்ச்சி, பகை உணர்ச்சி மூட்டிவிடக்கூடிய வகையிலே கிளர்ச்சிகள் .அமைவதை, நான், இன்று அல்ல, எப்போதுமே விரும்பிய தில்லை. இந்த என் எண்ணத்தை எடுத்துரைக்க என்றும் தயங்கினதுமில்லை. கூட ஆகஸ்டு முதல் நாள் அய்யா அவர்கள் சொன்னபடி கொடி கொளுத்தப்பட்டிருந்தால், நிச்சயமாக அவரைத் தூசி அணுகாது. அவரைப் பொறுத்தமட்டில் எத்தகைய எதிர்ப்பும் பகையும் துரும்பு; எனவே, அவருக்கு ஒரு சிறு குறைபாடும் ஏற்படாது ஆனால், அன்று,மூண்டிருக்கக்கூடிய பகை உணர்ச்சியும் வெறுப்புணர்ச்சியும் நிச்சயமாக திராவிட இயக்கத்தைப் பல ஆண்டுக் காலத்துக்குப் பழிக்கும் பகைக் கும் உள்ளாக்கிவிட்டிருக்கும். 'பரவாயில்லை, அவர்கள் கூறு வதிலும் நியாயம் இருக்கிறது' என்று சொல்லும் அளவுக்கு நம்மை நெருங்கி வந்துகொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள், நாம் கூறும் எதையும் ஏற்றுக் கொள்ளலாகாது என்ற அள வுக்கு நம்மை விட்டு விலகிவிடுவார்கள். தம்பி, ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்துப் பணியாற்றும்போது நாளாகவாக எவ்வளவுக்கெவ்வளவு ஆழ மாக அந்தக் கொள்கை ஒரு சிலரிடம் பதிந்து விடுகிறது என்பது மட்டுமல்ல, வெற்றிக்கு வழி, நாளாகவாக எவ்வள வுக் கெவ்வளவு விரிவடைகிறது, பரவுகிறது, மாற்றாரை உற்றார் ஆக்குகிறது, என்பதுதான் வெற்றிக்குப் பெரிதும் துணை செய்யும். இந்த முறையிலேதான், நான், பலகாலமாகவே, காங் கிரஸ் கட்சியில் இன்று உள்ள திராவிடத் தோழர்களில் - அந் தக் கட்சியாலேயே வாழ்ந்து தீரவேண்டியவர்கள் தவிர- மிகப்பலரை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் வகையான கிளர்ச்சி வேண்டும் என்று கூறிவருகிறேன். கோழைத்தனம் என்கிறார், பெரியார். ஏறக்குறையப் பதினைந்து ஆண்டு பயிற்சிக்குப் பிறகும் பெரியாரிடம்தான் -பார் தம்பி! என்னை விட்டுக் கோழைத் தனம் போகவில்லை என்றால், (பெரியாரே கூறுகிறார்?) என் போன்றவர்களையே ஏராளமாகக் கொண்டுள்ள திராவிடக் அக-8