உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

123 விட்டெறிகிறான் - அது அவள்மீது பட்டபோது, ராகி விடுகிறது -கண்களில் ஒத்திக் கொள்கிறாள் இது காதலருக்கு ஒரு சம்பவம், கல்லே மல ஆனால், காதலுக்கே இதுதான் இலக்கணம் என்று கொண்டுவிடக் கூடாதல்லவா. போரிலும் காதலிலும் சந்தர்ப்பங்கள், சில சம்பவங்களை உருவாக்கும்; அந்தச் சம்பவங்களை மட்டுமே கொண்டு, அவைகளுக்கு இலக்கணம் வகுத்துக் கொள்ளக்கூடாது. அதே முறையிலே தான், கொடிகளை எரிப்பதும், கோட் டைக் கொடிமரத்தை வெட்டிச் சாய்ப்பதும், குத்தீட்டி வீசு வதும், கொல்லும் வேழத்தை ஏவுவதும்-எல்லாம் சம்பவங் கள் - விடுதலைப் போரிலே - பல நாடுகளிலே. அந்தச் சம்பவங்கள், திட்டமிட்டு நடைபெற்றவை அல்ல. அந்தச் சம்பவங்களைக் கொண்டு, ஒரு போர்முறை வகுக் கப்படுவதில்லை இந்த எண்ணம் எனக்கு மேலிட்டதால்தான், ஆகஸ்ட் டில் நடைபெற இருந்த அந்தக் காரியம், அவசியமற்ற பகை யையும், அணைக்க முடியாத குரோதத்தையும், போக்க முடி யாத பழியையும் உண்டாக்கிவிடும் என்று அஞ்சினேன். காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும், அந்தச் சம்ப வம் நடைபெறவில்லை. கடைசிநேரத்தில், கொடி கொளுத் துவதைப் பெரியார் நிறுத்திக் கொண்டார். எனக்குள்ள பிரச்சினை, போதுமான வாக்குறுதி பெற்றுக் கொண்டு நிறுத்தினாரா, இல்லையா என்பதல்ல. என் மகிழ்ச்சி கொடி கொளுத்துவது நிறுத்தப்பட்டது என்பதில்தான். பெரியாருக்கு இன்று உள்ள பெரும் செல்வாக்கு சாமான் யமானதல்ல - அதைக் குறைத்துமதிப்பிடும்கயவனல்ல நான் -காங்கிரசிலே உள்ளவர்களிலேயே சில பலருக்கு இன்று செல்வாக்கு இருப்பதை,உதாரணமாகக் காமராஜருக்கு நல்ல பெரியா செல்வாக்கு இருப்பதை ஒப்புக் கொள்ளும் நான், ருக்கு உள்ள செல்வாக்கையா குறைத்து மதிப்பிடுவேன். அவருக்கு இன்றுள்ள செல்வாக்கும், அதனை ஈட்டிட அவராற் றியுள்ள அரும் பெரும் பணியும் அபாரம். எதற்கும் அஞ்சு பவரல்ல! எதிர் நீச்சலில் பழகியவர்! கொடி கோட்டை வாச லில் உள்ளதை கொளுத்த வேண்டுமென்றாலும், அதனால் ஏற் படக் கூடிய ஆபத்துபற்றித் துளியும் கவலைப்பட மாட்டார். அது அவருக்குச் சேவையால் கிடைத்தது மட்டுமல்ல, அவரு டைய சுபாவமே அத்தகையது. அந்தக் குறுகுறுப்பான கண் களிலேயே நான் பல சமயங்களில் கோபம் கொந்தளிக்கக்