உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

130 நன்றாக எடுத்துக் காட்டிவிட்டது- எனவேதான், யார் எத்த கைய போராட்டம் துவக்கினாலும், நாம் வரவேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் - ஆவல் அதிகமாகி, அது நிறைவேறாதபோது கோபம் அதிகமாகிறது - கண்டனம் வீசு கிறார்கள் / வேறென்ன! பிறர் மனம் மகிழும்படி நடந்துகொள்வது நல்லதுதான் - பண்புகூடத்தான் அது - ஆனால் தன்மானம என்ற ஒன்றும் இருக்கிறதே, ஒரு அமைப்பின தன்மானம், அது அழைககப் பட்டது, அதைக் கலந்து திட்டம் தீட்டப்பட்டது என்று நிலைமை இருந்தாலல்லவா நிலைக்கும். தழைக்கும்! போர் முடிந்துவிட்டது! பலாபலன் தெரிந்துவிட்டது!! என்ன காண்கிறோம் தம்பி. காமராஜரின் அறிக்கை!! 0 0 0 யூனியன் பார்லிமெண்டு சபாநயாகர், மாவ்லங்கர் இந்தி கட்டாயத்தின் மூலம் நுழைக்கப்படாது என்று சேலத்தில் மே 31-இல் பேசி இருக்கிறார், (மெயில் - ஜூன் ) 0 0 0 இந்தியைத் திணிக்கவில்லை - திணிக்கமாட்டோம். இந்தி படிக்கும்படி தூண்டுகிறோமே தவிர, கட்டாயப்படுத்தவில்லை என்பதாக யூனியன் தொழிலாளர் மந்திரி கந்துபாய் தேசாய் மே 28-இல் திருச்சூரில் தெரிவித்திருக்கிறார். (மே 29-மெயில்) 0 0 0 உத்யோகத்தை நாடுபவர்களுக்குத் தொல்லை வராதபடி தான் இந்தியைப் பக்குவமாகப் பரப்புவோம், என்று யூனியன் டிப்டி போலீஸ் மந்திரி தத்தார் தெரிவிப்பு, மே.4, மெயிலில் காணக்கிடக்கிறது. 0 இந்தியை மக்கள் மீது பிரச்சினைக்கே இடமில்லை யூனியன் மந்திரி கேஸ்கர் வெளிவந்திருக்கிறது. 0 0 0 கட்டாயப்படுத்தித் திணிக்கும் என்று மே 11-இல், பூரியில், தெரிவித்திருப்பது, இந்துவில் 0 0 இந்தியைத் திணிக்கமாட்டோம் கட்டாயப்படுத்தமாட் டோம் -- தமிழ் நாட்டு மக்கள் தாமாக இந்தியில் பயிற்சி பெற்று வருகிறவரையில் காத்துக்கொண்டிருப்பேன் - என்ப தாக, யூனியன் மந்திரி கேஸ்கர் மதுரையில் ஜூலை 6 .இல் பேசியிருக்கிறார். இந்தத் தெரிவிப்பு மெயிலில் வெளியாகி இருக்கிறது. 0 0 0