உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

154 பணிவிடைக்காகப் பட்டுடுத்திப் பார்வையால் கொல்லும், பசுங்கிளிகளும், தேவை என்று நமது துறவிகள் கேட்ட தில்லை - அந்நாளில்! மலரம்பு பட்டதால் துடித்துக் கிடக்கும் பட்டத்தரசர்களுக்கு, மட்டற்ற மகிழ்ச்சியூட்டும் மாமந்திரம் கூறிடும் ஆற்றலற்றவர்கள் நமது துறவிகள்! ஆரியத் தவசிக ளோ! பர்ணசாலைகள், ஆற்றோரத்தில் சோலையின் நடுவில், சாலைப் பக்கத்தில்! தென்றல்சாமரம் வீச,தேமாங்கனி குலுங் கும் பூங்காவிலிருந்து கிளியும் நாகணவாய்ப்புள்ளும், குயிலும் புறாவும் பிறவும் இசை பயில, மான்கள் துள்ளித் திரிய, மன்னர்கள் கைகட்டி, வாய்பொத்தி நின்று, கேட்டது தர, பணிவிடைப் பெண்கள் புடைசூழ, பத்தினிகளுடன் 'ரசானுபவத்தைப் ' பருகி இன்புற்று வாழ்ந்து வந்தனர். ஈசனை மறந்தனரோ எனின்,இல்லை, இடையிடையே யாகம், யோகம், உண்டு. வேள்விப் புகை கானகத்தை மணக்காடாக்கும் - தவசியின் பர்ணசாலைகளைச் சிங்காரக் கூடமாக்கும் தேவலோக மேனகை தொட்டிட, காமம் துளிர்த்தது ஆஸ்ரமத்திலன்றோ! திலோத்தமையும் ரம்பை யும், ஊர்வசியும் மற்றமற்றவிண்ணுலகத்து ஆடலழகிகளும், ஆட்கொல்லிகளும் அடிக்கடி வந்து, தடைகாட்டி, கனகப் பந்தினை ஆட்டி, காவி கமண்டலமேந்திகளைப், பம்பரமாக்கி கலகலவெனச் சிரித்து, பொலபொலவெனக் கண்ணீர் உகுத்து, இன்பப் பெருக்கால் ஆஸ்ரமங்களை இந்திராதிதேவர் களும் கண்டு பொறாமைப் படத்தக்கதான புனித ஸ்தலங் களாக்கி உள்ளனர். "கோழி கூவிற்று கோகிலமே! ஆறு சென்று அனுஷ் டானாதிகளை முடித்துக் கொண்டு வருகிறேன்! அன்னமே! ஏன் எழுந்திருக்கிறாய்! கமண்டலத்தை நான் தேடி எடுத்துக் கொள்கிறேன். ஆயாசம் நிரம்ப இருக்கிறது ஆருயிரே! நீ சற்று நேரம் அயர்ந்து நித்திரை செய்" என்று கூறிவிட்டு அவர் செல்ல, அவள் கண் அயர்ந்த நிலையில்,"அன்னமே! சொர்ணமே! கன்னலே மின்னலே! கட்டித் தங்கமே! எட்டிப் போகாதே என் இன்பமே!" என்று மீண்டும் கொஞ்சுமொழி கேட்ட பாவை, கேட்டார்க்குக் கேட்டது அருளும் வள்ளல் போல் மனதறிந்து நடந்துகொள்ள, அந்த விருந்து உண்ட நிலையில், அவன் ஆஹாஹாரம்! போட, புதுமையா இருக்கி றதே! இதுநாள் வரை நான் கண்டறியாத பேரின்பமாக வன்றோ இது உளது! என்றெண்ணி, அந்தப் பூவை புளகாங் கிதமடைய, கபடமறிந்த கெளதமன், கல்லாக்கிய, அந்தக் கட்டழகி அகலிகை கண்ணாயிரம் உடையான் என்று இன்று பாமரர் கொண்டாடும் இந்திரனைக் கூடிச் சுகித்த இடம் தவசியின் ஆஸ்ரமமன்றோ! அங்கம் தங்கம்! ஆடும் முல்லை!