உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

160 தருபவரும், ஆண்டவனாகத்தான் இருக்கவேண்டும் என்று அந்தப் பிஞ்சு உள்ளம் எண்ணிற்று. அவனுக்கு எப்படியும் ஆண்டவனைப் பார்த்துவிட வேண்டுமென்று ஒரே ஆவல். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஐயன் என்றல்லவா அத்தகையவரைக் காண அனைவரும் பஜிக்கின்றனர்; வேண்டும் என்று ஒரே துடிப்பு. ஆண்டவனல்லவா, நம் தாயாருக்குப் பண்டம் அளிக் கிறார்; அவரை தரிசிக்கவேண்டும்- என்று எண்ணிக்கொண் டான். "அம்மா! இன்று என்னையும் அழைத்துக்கொண்டுபோ" என்று கெஞ்சினான்; தாயும், அந்தனியை உடன் அழைத்துச் சென்றனர். நீண்டதூரம் சென்ற பிறகு ஒரு மாளிகையை அடைந் தனர்; அங்கு ஒரு முதியவர் இருந்தார்; தாய் அவருக்கு வணக்கம் கூறினாள். முதியவர் சிறுவனுடைய முதுகில் தட்டிக் கொடுத்து, பணம் கூடக் கொடுத்தார். தாயார் உட்பக்கம் சென்றுவிடவே, சிறுவன் கூடத்தில் இருந்தான். வேறு மாதர் சிலர் அவனுக்குப் பாலும் பலகார மும் கொடுத்தனர். சிறிது நேரம் கழித்துத் தாயார், ஒரு சிறு மூட்டையுடன் வந்து, சிறுவனை அழைத்துக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டாள். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுச் சிறுவன், "அவர் அப்படி ஒன்றும் பிரமாதமான தேஜசுடன் இல்லையே அம்மா! என் றான், “யார்? என்று தாயார் கேட்டாள்; ‘“ஆணடவன்!>> என்று சிறுவன் கூறினான். தூக்கிவாரிப்போட்டது தாயா ருக்கு. என்னடா சொல்லுகிறாய்? ஆண்டவன் கீண்டவன் என்று என்னமோ சொல்கிறாயே, என்ன அது? என்று அவள் கேட்க, சிறுவன், மாளிகையைச் சுட்டிக்காட்டி அவர் தானம்மா, ஆண்டவன்! அவர்தானே நமக்கு நல்ல பொருளெல்லாம் தருகிறார் ஆண்டவன்தான் அனைவருக்கும் நல்லது தருகிறார் என்று பேகிக்கொண்டிருந்தீர்களே நீங்க ளெல்லாம். நான் கேட்டுக்கொண்டுதானே இருந்தேன் என்று அந்தனி விளக்கமளித்தான் அவன் தாய்க்கு நீண்ட நேரம் வரையில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. "அவர் ஆண்டவன் அல்ல! சர். வில்லியம் கூப்பர்! அவரி டம் நான் ஊழியம் செய்திருக்கிறேன் என்று நீண்ட நேரத் துக்குப் பிறகு கூறினாள். "ஒரு விதத்தில் நமக்கு இந்தப் பொருளை ஆண்டவன் தான் கொடுக்கிறார் என்று கூறவேண்டும். சர், வில்லியம்