உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

165 வாயை மூடிக்கொண்டு செல்கிறான்! வாய் மூடிக்கிடக்கிறது! ஆனால், மனம்? சிந்தனை? மாமி மருண்டு போகிறாள் மேதைகள் இன்று மிரட்சி யுற்று ஈதேது பயங்கரமான புரட்சி தலைவிரித்தாடுகிறதே! என்று பேசுகிறார்களே, அதுபோல. ஆனால் அந்தனியின் உள்ளத்திலே ஊறிய எண்ணங்கள் மாமியும் பிறரும் அடக்க அடக்க, வேகமாக வளர்ந்தது.- மடியவில்லை. அந்தனி உழைப்பால் உயர்ந்து, ஊராரின் நன்மதிப்பைப் பெற்றான் - ஆனால் சுயநலம் அவனை அடிமைப்படுத்தி விட வில்லை-சுகபோகத்தில் அவன் மூழ்கிவிடவில்லை. பக்தர்களின் பேச்சிலே சகல அறிவும் இருப்பதாகக் கருதும் போக்கினனாக அந்தனி இருந்திருந்தால், செய்த புண்யத்தின் பலனாக ஆண்டவன் தனக்குஇந்த நல்ல நிலையை அருளினார், எனவே அவருக்கு மேலும் சேவைசெய்ய வேண்டும் என்று கருதி, ஆலயத் திருப்பணியில் மும்முரமாக ஈடுபட்டு, பெரிய பக்தி மான் என்று விருந்து பெற்றிருக்கக்கூடும்! ஆனால் அவனோ ஒரு சந்தேகி! சிறு பருவ முதலே. எனவே அவனுக்கு மன திலே சிக்கல் குறையவில்லை! எல்லாம் அவன் விட்டவழிப் படி நடக்கும் என்று எண்ணி, சோம்பித் திரியவில்லை. ல்வா 0 0 0 துனைவி நோய்வாய்ப்பட்டதால் அந்தனி துயர்க்கடலி லாழ்ந்தான். ஆண்டவன்மீது பாரத்தைப் போட்டுவிட்டால் அவர் ஆபத்தைப் போக்குவார் எதையும் சாதிக்கவல்லவரல் என்று சர்வேஸ்வரன், எண்ணிடுமவனல்லவே! எனவே, அந்தனி 'பூஜை'கள் செய்து, தன் துயரைத் துடைத்துக் கொள்ள முயலவில்லை. மாறாக, ஏழைகளுக்கு இதம் தரும் தொண்டாற்றினால், அதன்மூலம் இறைவனு டைய அருளைப் பெற இயலும் என்று எண்ணி, மும்முரமாக அந்தப் பணியில் ஈடுபடலானான். ஏழை மக்களின் இருப்பிடம்தான், சேச்சே! எவ்வளவு கேவலமாக இருக்கிறது! எங்கும் ஒரே அசுத்தம்! நோய் அவர்களைப் பிய்த்துப் பிடுங்காமலா இருக்கும்! படுகுழி கள்! அதன் மீது படுதாக்கள் போர்த்தப்பட்டுள்ளன. இந்தச் சேரிகளை ஒழித்திடவேண்டும். இந்த 'நரகத்துக்கும்'ஏழைகள் எவ்வளவு வாடகை கொட்டி அழவேண்டி இருக்கிறது,பணம் பிடுங்கும் செல்வர்களுக்கு! இந்த அக்ரமத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். ஏழைகளைக் கசக்கிப் பிழியும் கொடுமையாளர் களி.. மிருந்து மீட்கும் திட்டம் காணவேண்டும். மலிவான, அதேபோது சுத்தமான விடுதிகள் அமைக்கவேண்டும்.ஏழை