உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

189 யாளனாகாதிருக்க வேண்டுமென்றுவிரும்புகிறார்? அந்தனிக்கு இது, ஆண்டவன் வேண்டுமென்றே எடுத்துக் கொண்ட வீண்வேலை என்று தோன்றிற்று. பாதிரிமார்களால், சிறுவனாக அவன் இருந்த நாள்களிலேயே, விளக்கமளிக்க முடியவில்லை. இப்போது அவர்கள் எப்படிப் பதிலளிப்பார்கள். பெட்டி, பலநாடுகள் சென்று வருவது வாடிக்கை. பெட்டிக்கு, மணமாகவில்லை - அந்த நினைப்பும் எழவில்லை, எனவே, அடிக்கடி, பலநாடுகள் சென்று, அறிவுக்கு விருந்து பெற்று மகிழ்ந்தாள். ஒருநாள், அவளிடம், அந்தனி, இந்த அடிப்படை விஷயமாகப் பேசும்போது, அவள் ஒரு விளக்க மளித்தாள். 0 0 0 சில ஆண்டுகளுக்கு முன்புநான் சான்பிரான்ஸிஸ்கோ விலிருந்து ஹாங்காங் போகையில், ஒரு சீனக்கனவானுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. மனிதனுடைய முன் னேற்றத்துக்குப் பெரிய தடைக்கல்லாக இருப்பது கடவுள் தான் என்று அந்த சீனப் பெரியவர் சொன்னார். நான் திகைத்துப் போனேன். "தனக்காக வேண்டிய தனைத்தையும் கடவுள் தருவார். "நமக்கெல்லாம் புரியாத ஒரு முறையிலே, கடவுளின் திரு வருள் வேலை செய்கிறது, அதன் விளைவாக, பூலோகம் சுவர்க்க பூமியாகப் போகிறது. "மனிதன் செய்யவேண்டிய தெல்லாம், பொறுத்திருக்க வேண்டும், பகவானிடம் நம்பிக்கை வைத்திருக்கவேண்டும். அவ்வளவுதான்.' " இங்ஙனம் மனிதன் வெறும் கருவி; ஆண்டவன் ஆட்டி வைக்கிறபடி ஆடும் பதுமை, என்று நம்பித்தான் மனிதன் நாசமாகிறான். மனிதன் கடவுளின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு சோம் பிக்கிடப்பதை விட்டு முயற்சியில் ஈடுபடுவானானால்,மண்ணுல கில் விண்ணுலகம் காணலாம். ஆனால் அதற்கு, மனிதன், தன்னலத்தை விட்டொழிக்க வேண்டும். அது கடினமானது; எனவே மனிதன், எளிதான வழி தொழுதுகிடப்பது, தேவன் எதையும் தனக்காகச் சாதித்துத் தருவான் என்று நம்பிக் கிடப்பது என்ற நிலைக்கு வந்து விட்டான். அதனாலேயே மனிதகுல முன்னேற்றம் குந்தகப்படுகிறது.கடவுளைத்தேடித் தேடி, இல்லை என்று தெரிந்து கொள்கிறான். கடவுள் நம் உள்ளத்திலல்லவா இருக்கிறார். அ.க--11