உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

171 பெறுகிறான். அவனைப் பிணைத்து வைக்கும் பொருளை எல்லாம் அவன் நீக்கிவிட்டதும், நிம்மதி பெறுகிறான். உடமைகளால் உள்ளத்துக்கு ஏற்பட்ட சுமை ஒழிந்து போ கிறது. விடுதலை கிடைக்கிறது. நான், சாத்தான் இருப்பதை நம்புகிறேன், பெட்டி நாம் பாசுரங்களில் குறிப்பிடுகிறோமே, அந்தச் சாத்தான் அல்ல- கடவுள் சன்னிதானத்தில் கலாம் விளைவித்து அவ ரால் பூலோகத்துக்கு விரட்டப்பட்டுக் கிடக்கும் சாத்தான் அல்ல நம்மிடம் குடிகொண்டிருக்கும் தீய குணத்தைக் குறிப் பிடுகிறேன். வெறுப்புணர்ச்சி, பேராசை களை நமக்குத் தந்தது யார்? போன்ற தீய குணங் மனிதன், கடவுளின் கட்டளைக்கா, சாத்தானுடைய கட் டளைக்கா, எதற்குக் கட்டுப்படுகிறான்? குழப்பம் ஏற்படு கிறது. பெட்டி! தன்னலமறுப்புதான், சாத்தானை விரட்டும் வழி உய்யும் மார்க்கம். நாம் போராட வேண்டும், யாக நின்று போராட வேண்டும். கடவுளுக்குத் துணை சிலர் இந்தத் தூய பணிபுரியக் கிளம்பினால் போதும். பிறர் பிறகு வருவர். இன்பலோகமாம் சுவர்க்க பூமியில் இடம் பிடிக்க அல்ல, பெட்டி; உலகைக் காப்பாற்றப் பணியாற்ற வேண்டும். j தீயகுணம் எப்படியும் தன்னால் மடிந்தொழியும், கடவுள் அதனை ஒருநாள் ஒழித்தே தீருவார் என்று எண்ணிப் பய னில்லை. தீய குணத்தை ஒழித்திட நாம் தீவிரமாகப் பணி யாற்றித் தீரவேண்டும். கடவுள் தீயசக்திகளை ஒழிப்பதில் வெற்றி பெறவில்லை. அவரை மூலைக்கு ஒதுக்கி விட்டு, தீய சக்தி, மணிமாடத்தில் கொலுவிருக்கிறது. எனவே கடவுளின் காரியத்தைச் செய்ய, தன்னலத்தை விட்டொ ழித்துப் பணி புரியவேண்டும். துறவிகள் வேண்டும். 0 0 0 அந்தனி விளக்கம் பெற்று விட்டான் என்பதை மட்டும் இச் சம்பவம் காட்டவில்லை. தன்னலமறுப்புக்குத் அவன் துணிந்துவிட்டான் என்பதையும் இந்த உரையாடல்'. எடுத்துக் காட்டிற்று. பெட்டி, அவன் உள்ளத்தில் பெரு நெறி தவழ்வதை உணர்ந்தாள்; வாழ்த்தினாள். வெற்றி கிடைத்துவிட்டது. போர் முடிந்துவிட்டது. எல்லாவற்றையும் து ந்துவிடுவது என்ற முடிவுக்கு அந்தனி வந்தாகிவிட்டது. உலகின் செல்வம் அனைத்தையும் குவித்து