உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

177 'ற'கரம் மற்றோர் அணி! இதனையும் பாழ்படுத்துகின்ற னர், உரையாடலில்! ‘றகரம் வன்மையான உணர்ச்சியைக் காட்டிடும் ஒலிக்குறி! இதனை உணராமல், 'றவை, படாத பாடுபடுத்து கிறார்கள் நம்மனோர். காற்று, காத்தாகிவிடுகிறது! நாற்று, நாத்தாகிறது! ஐயகோ! அம்மவோ!சிலம்பளித்த செல்வன், அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே! என்று கண்ணகி கூறுவதாகச் செப்புகிறாரே. ஆறு றகரம் ஒலிக்கிறது கேண்மின் - என்று எடுத்துக்காட்டுகிறார். மற்றும் பலகூறி, பேராசிரியர் மொழிவளம் பாழ்படுவது குறித்துக் கவலைப்படுகிறார். 'ழ' கரம் - 'ற' கரம் பாழ்படுகிறது!! 'ழ' தமிழ் மொழிக்கே தனிச் சிறப்பளிக்கும் அழகணி. இதனை அறியாதிருக்கும் தமிழர் தமிழழிப்போ ராகின்றனர்! அவர்தம் போக்குக் கண்டு, மொழியின் சுவையினைப் பருகிடும் பேராசிரியர், கொதித்தெழுவதும், ஆகுமோ இந்தப் போக்கு எனக் கடாவுவதும், 'ழ'கரத்தின் அருமையினைக் கூறுவேன் கேண்மின், என்று அறைவதும் முறையே- குறை கூறுகின்றேனில்லை! அவர் ஆறு (ற'கரம் ஒலித்திடும் சிலப் பதிகார அடிகளை நினைவுபடுத்தும்போது, உண்மையிலேயே, அந்த 'ற'கரங்கள், தமிழ்மொழியின் ஒலி மாட்சியையும், பத்தினிப் பெண்ணின் உள்ளத்தை ஆட்சி செய்த வீர உணர்ச்சியையும் ஒருசேர எடுத்துக்காட்டத்தான் காண்கி றோம். மறுப்பாரில்லை! அத்தகைய மாண்புமிகு மொழிக்கு நாம் உடையோம் என்றெண்ணிப் பெருமிதம் கொள்ளாம லில்லை! மங்கை நல்லாளிடம் காணும் ஒயிலும், மயிலிடம் காணும் சாயலும், மொழியிடம் காணப்பெறும் ஒலி அழகுக்கு ஈடாகாதுதான்! அந்த ஒலி அழகு, கொச்சை பேசுவதால் செத்தொழிகிறது என்பது கண்டு கண்ணீர் வடித்திடத் தக்க தோர் நிலைதான். ஐயமில்லை! ஆனால்......! மொழியின் "ஒலி" மட்டுமா இன்று பாழ்பட்டுக் கிடக்கிறது. 'ஒளி' மங்கி மறைந்து கொண்டிருக்கிறது! ஒலிகெட்டும் ஒளிமங்கியும் இருத்தல் மட்டுமல்ல, மொழியே கீழ்நிலைக்கு, தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது. பாவலரும் காவலரும் போற்றி வளர்த்த மொழி, அரச அவையிலும், ஆடலரங்கிலும், புலவர் மன்றமதிலும், பூங்கா