உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

185 பாடி; அதற்குத் தகுந்த நாட்டியமாடிக் காட்டினராம். தம்பி, கவர்னர் நல்ல கலாரசிகர்! திருவல்லிக்கேணி, மயிலை அடை யாறு, இவைகள், நமது நாட்டுப் பண்பாடு இன்னதென்று அறியாத வெள்ளைக்காரர்களுக்கே 'கலாரசனை' ஊட்டினஎன் றால், நமது கவர்னருக்கு அதைஊட்டச்சிரமம்என்ன ஏற்பட் டிருக்கப் போகிறது. அவரும் கலா நிகழ்ச்சிகளிலே அடிக்கடி கலந்து கொள்கிறார். எனவே, பள்ளிச்சிறுமிகள் பாடிஆடிய போது. அவர் அரும்பும்-மணம் தருகிறது என்றெண்ணி இருக் கக்கூடும். கலை, கடற்காற்று வீசும் இடங்களிலே மட்டுமல்ல. சிற்றூர்களிலும் சிறப்புடன் விளங்க முடியும் என்று எண்ணி மகிழ்ந்திருப்பார். கலைவளர்ச்சிக்கு இந்தச் சிறுசுகளின் சிங் கார நடனம் ஒரு எடுத்துக்காட்டு என்பதுபற்றிக் கவர்னர் எண்ணிக் கொண்டிருந்திருப்பாரே தவிர, அந்தப் பாட்டின் பொருள்பற்றி அவர் சிந்தனையைச் செலவிட்டிருக்கமாட்டார்; பொருள் தெரிந்த சிலரும், எங்கே இந்தப் பாடலின் பொருள் கவர்னர் பெருமானுக்குத் தெரிந்துவிடுகிறதோ என்றுதான் கவலைப்பட்டிருப்பார்களே தவிர, பொருளை விளக்கி இருக்க மாட்டார்கள். எல்லா வளமும் பொங்கிடும் எழில் நாடு, எங்கள் தமிழ் நாடு! ஆனால் யாராரோ வந்தார்கள், வந்தவர்களுக்கெல் லாம் இடம் கொடுத்துக் கொடுத்து, ஏமாந்தநாடு இதுஎன்று, இரக்கமும் வெட்கமும் எழத்தக்கவிதமான பொருர்கொண்ட பாடல் அது. 'ஓர் இரவு' எனும் படக் காட்சியில் இருப்பது; பாடலைத் தீட்டியவர் முத்தமிழ்க் கலா வித்வரத்ன டி.கே. சண்முகம் அவர்கள்.அவர்கூட, இன்றைய நிலையில், விரும்ப மாட்டார் என்று எண்ணுகிறேன், இப்படிப்பட். கருத்த மைந்த பாடலைத் தீட்டியவர் என்பதை வெளியே எடுத் துரைக்க, நிச்சயமாகக் கவர்னருக்குப் பொருள் எடுத் துரைக்கப்பட்டிருந்தால், அவர் கலையைக்கூடக் கண்டித்து விட்டுப் போயிருப்பார்! கலையை, கவர்னர்கள், கண்ணுக்குக் குளிர்ச்சியும், காதுக்கு விறுவிறுப்பும்,இதயத்துக்கு இன்பமும், நரம்புக்கு முறுக்கும், இரத்தத்துக்குச் சிறிதளவு சூடும் தரு வதற்கான சாதனமாக்கிக்கொள்ள விரும்புவார்கள யன்றி, வேறு வகையாகப் புகுத்துவது கடினம் என்று சொல்லத்தக்க கருத்துக்களை, கலைமூலம் புகுத்தவேண்டும் என்ற நோக்கத் துடனா கொள்வார்கள்! செச்சே! கவர்னர்களுக்கு என்ன 'விதியா' இப்படி அல்லற்பட! ஆனந்தமாக வாழ, அவர்கள் அரும்பாடுபட்டு, அரசர்களையும், அரசாண்ட ஆங்கிலேயரை யும் விரட்டி அடித்து, அரண்மனைகளைக் கைப்பற்றிக்கொண்டு, அறுவடை கண்டு அகமகிழ்கிறார்கள். அந்தநிலையில் உள்ளவர் களிடம், மக்களின் உளநிலையை மாற்றக் கலை பயன்பட வேண்டும் என்று சொன்னால், நிச்சயமாகக் கோபிப்பர். ஆ.க-- 12