உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

191 தது - ஏதேது கப்பல் கவிழ்ந்துவிடும் போலிருக்கிறது என்று தெரிந்ததும், கம்யூனிஸ்டுகள் தங்கள் போக்கை அவசரஅவசர மாக மாற்றிக் கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவு த ரத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டினர். எங்களை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என்று கெஞ்சுகிற தீர்மானமாக இருந்தது பத்திரிகை நிருபர்கள் ஜனாப் ஜின்னாவைக் கண்டு, கம்யூனிஸ்டு தீர்மானத்தை எடுத்துக் காட்டி, அவர் கருத் தைக் கேட்டனர். அவர் சொன்னார், "பாகிஸ்தான் திட்டத் துக்கு ஆதரவு திரண்டு வராதிருந்த கட்டத்தில், அதன் நியா யத்தை இந்த யோக்கியர்கள் மதித்து ஏற்றுக் கொண்டிருந் தால், நான் இந்தக் கம்யூனிஸ்டுகளுக்கு நன்றி செலுத்தி இருப்பேன்! என் திட்டத்தை விளக்கமறியாத முஸ்லீம் களும், வீம்புக்காரக் காங்கிரசாரும் எதிர்த்தபோது, கம்யூ னிஸ்டுகள் அவர்களோடு சேர்ந்துகொண்டு என்மீது கல் வீசி னர். இப்போது, பாகிஸ்தான் பெறப்போவது உறுதி என்ற கட்டம் பிறந்துவிட்டது. இப்போது இவர்கள் பாகிஸ்தா னுக்கு ஆதரவுத் தீர்மானம் போட்டு என்ன எதிர்பார்க்கிறார் கள்! என்னுடைய நன்றியையா? பைத்தியக்காரர்கள்! அவர் களுக்கு இப்போதாவது தெளிவும் யூகமும்ஏற்பட்டதே என்று மகிழ்ச்சி அடைகிறேன் - அதுவே தவிர என் நன்றிக்கு அவர் கள் உரியவர்களல்ல" என்று கூறினார்.சுருண்டு கீழே விழுந்த அந்தச் சூரர்கள். மறுபடியும் எழுந்து அவர் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவ்வளவு பலமான அடிவிழுந்தது. அதே போக்கிலேதான், திராவிட நாடு விஷயமாகவும்,கம்யூ னிஸ்டுகள் கையாண்டு வருகிறார்கள். வடக்காவது. தெற்கா வது என்று 'பாரதம்' பேசி வந்தவர்கள். இப்போது தெற்கி லேயும் தொழில் வளரவேண்டும் என்று பேசத் தொடங்கி யுள்ளனர். 0 0 0 தாயகத்தைத் தருக்கர்கள் அடிமைப்படுகுழியில் தள்ளிய போது, செல்வத்தைச் சுரண்டியபோது, தொழில்களை நசுக் கியபோது, அறிவை அழித்தபோது, தன்மானத்தை ஒழித்த போது, அடக்குமுறையை அவிழ்த்து விட்டபோது, உன்னை ஈன்றெடுத்து இயல்புகளை அளித்து, இயற்கைச் செல்வத்தால் உன்னை ஊட்டி வளர்த்த தாயகம் தலைவிரி கோலமாக்கப் பட்டு, மானமழியும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு, வடவரால் வதைக்கப்பட்டபோது, என்ன செய்து கொண்டிருந்தாய்? ஏதுமறியாத ஏமாளியாக இருந்தாயா? என்ன தென்று தெரியாமல் திகைத்துக்கிடந்தாயா? அங்ஙனமாயின். நீ ஓர் அப்பாவி! வீரக்குலத்திலே தப்பிப் பிறந்த பதர் : விளக்கமறியாத வீணன்! தூத்தூ ! திருவும் அறிவும், வீரமும் செய்வ