உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

202 பஞ்சை பிரபுவானதும் அவன் மனதிலே எத்தகைய நஞ்சு நெளிகிறது பார், தம்பி ! காங்கிரஸ்காரர்கள், தேசீயத் திருக்கோயிலிலே பூஜை நடாத்திய காலம் தீர்ந்துவிட்டது; இப்போது அவர்கள் பவனி வரும் பிரபுக்களாகி விட்டனர் - நெஞ்சமெலாம் நஞ்சாகிவிட்டது-என் செய்வது? வஞ்சியர் பாடி ஆடி மகிழ்வூட்ட, சீமான்கள் பூச்சக்கரக் குடை பிடிக்க, ஆளவந்தார்கள் சாமரசம் வீச, வைபவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன! உற்சவம் நடத்துகிறார்கள். உபதேசம் கிடைக்கிறது!! ஊர் மக்களின் வறுமையும் வேத னையும், எப்போதும்போலத்தான் இருந்து வருகிறது?! தஞ்சை திருச்சி மாவட்டங்களிலே, தம்பி, பெரும் புய லடித்து படுநாசம் விளைந்ததே, நினைவிலிருக்கிறதா? நெற் களஞ்சியம், பொய்யாத பொன்னியால் பாலூட்டப்பட்டு வளரும் தஞ்சை. அங்கு ஊரெலாம் வெள்ளக்காடாகி, பெருமரங்கள் சாய்ந்து, பேய்க்காற்றால் ஏழைகள் இருப்பிடங்க ளெல்லாம், பிய்த்தெறியப்பட்டு, பெருஞ்சேதம் விளைந்த சமயம். அந்த நேரத்தில், பண்டிதர் வந்தார்! 'வாரீர் தலை வரே! எமக்கு வந்துற்ற அவதியைக் காணீர் பண்டிதரே! பூந்தோட்டம் அழிந்து கிடக்கும் கொடுமையைக் காணீர்! பொன்னியின் செல்வர்கள் புலம்பிக் கிடக்கும் கோரத்தைப் பாரீர்! கண்ணீர் துடைத்திடுவீர் ! கஷ்டத்தைப் போக்கிடு வீர்! காவலரே! வாரீர், வாரீர்! வேதனை குறையும், நம்பிக் கை மலரும். ஒரு நல்ல வார்த்தை, சிறிதளவு ஆறுதல்மொழி கூறவாரீர்! புயலே! கடலே! பேய்க்காற்றே! பெருவெள் ளமே! எம்மை அழித்திடக் கிளம்பினீர்! அழிவையும் ஏவினீர்! எனினும், அஞ்சற்க! அஞ்சற்க! உமக்கு வந்துற்ற இன்னலைத் துடைத்திடுவேன்! இடுக்கண் வருங்கால் நகுக! அழிவை ஒழித்திடுவேன், அல்லலைத் துடைத்திடுவேன்! என்று எமக்கு ஆறுதலளித்திட எமது அருமைத் தலைவர், நேரு பண்டிதர் வருகிறார், என்று கூறி, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, நம்பிக்கை பெறுவோம்! வருக பண்டி தரே! வருக! எம்மை வாழ்விக்க வந்த பெம்மானே வருக, ஈடில்லாத் தலைவரே! இணையில்லா வீரரே! வருக! வருக! என்று அழைத்தனர். நேரு பண்டிதர் வந்தார்- தென்னகத்துக்கு! தஞ்சை தலைவிரிகோலமாகக் கிடக்கிறது. பண்டிதரோ நேரே, சிந்தை அணிஒவ்வொன்றும்சிலிர்த்திடும் கவர்ச்சியூட் டும் கேரளம் சென்றார். குன்றின்மீதேறி, பளிங்குமாளிகை யில் அமர்ந்து, அங்குள்ள அடவியில், கரியும் கரியும்களியாட் டம் நடாத்திடும் காட்சியை, வேங்கைசீறி வேழத்தைத் தாக்