உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

207 போகும் ஓர் நாள் வந்தே தீரும் என்பதையும், அந்நாளில், எமக்குக் கொடுமைகளும் துரோகமும் இழைக்கப்பட்டபோது, அந்த நேருவுக்குப் பராக்குப் பாடிக்கொண்டும், பல்லக்குச் சுமந்து கொண்டும் இருந்தவர்தானே நீர்! எம்மை இம்சித்த போது அவரிடம் இளித்துக் கிடந்தவரல்லவா நீர்! எமக்குத் துரோகம் இழைக்கப்பட்டபோது அவர்முன் துதிபாடி நின்றீ ரல்லவா! விளக்கமறியாதாருக்கு விளக்க வேண்டும் என்ற பொறுப்பை மறந்து, கும்பலில் கூடிக் குலவினால், நமக்கும் சுவைத்திடச் சில கிடைக்கும் என்றுதானே அவர்பின்னோடு சுற்றித் திரிந்தீர் என்று கேட்கப் போகிறார்கள் என்பதை மறந்தேவிடுகிறார்கள். அதனால் தான், அறிந்ததைக் கூறவும் அச்சப்பட்டுக்கொண்டு 'அடைப்பம்' தாங்கி, அதிலேயே ஆனந்தம் தேடிக்கொள்கிறார்கள். இழைக்கப்படும் கொடு மையை எதிர்த்திடத் துணிவும், மக்களிடம் எடுத்துக்கூறிடும் நெஞ்சு உரம் கொண்டவர்களின் அளவு குறைவுதான், தம்பி. ஆனால் அவர்கள் தமது கடமையைக் கலக்கமின்றிச் செய்து கொண்டு வருகிறார்கள். அரசியலில் புதுப் புதுக் காற்றாடிச் சண்டைகளைக் கிளப்பிக் கொண்டு இருப்பதில்லை. நிழலை உருவமெனக் கூறிப் போராட்டம் நடத்துவதில்லை. பிரச்சினை எதற்கும் பரிகாரம் தேடும் முழு உரிமை எமக்கே பிறருக்கு இதிலே பின்னோடி வரத்தான் சலுகை அளிக்கப் படும் என்று பேசிடுவதில்லை. தொடர்ந்து, திராவிடருக்கு இழைக்கப்படும் கொடுமையை, துரோகத்தை, மக்களிடம் எடுத்துக் கூறி, அவர்களின் மனமயக்கத்தைப் போக்கிய வண்ணம் உள்ளனர். தம்பி! அந்த அரும்பணியாற்றிடும் அஞ்சா.நெஞ்சினர் கொண்ட கழகத்தில்தான். நானும் நீயும் இருக்கிறோம். 25-9-1955 அன்புள்ள, Jimmy vz