உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

219 காரணம் காட்டாமல் நண்பர் 'காரசாரமாக எழுதிவிட வில்லை; காரணம் காட்டுகிறார், நம்பிக்கையுடன். ஆரியரை நடுத்தெருவில் போட்டு அடித்தாலும் ஏன் என்றுகேட்க நாதி இல்லை என்கிறார், ஏன் என்ற காரணமும் கூறுகிறார். ஆரியர் செத்த பாம்புகளாகிவிட்டனர்! பாம்பு உயிரோடு இல்லை, எனவே, அதைப் போட்டு அடிப்பதால் ஆபத்து இல்லை!! அந்தத் 'துணிவு கொண்டு அடிக்கும் வீரனை, ஏன் என்று யார் கேட்கப் போகிறார்கள் - கேட்க மாட்டார்கள்1 ஆனால், செத்த பாம்பை யாரும் அடிக்க மாட்டார்கள் கூட்டுக்கோல்கொண்டு குப்பை மேட்டில் தள்ளுவர்; குப்பை குளம் போட்டுக் கொளுத்துவர்! பிரத்யேகமான இயல்பு படைத்த வீரர்தான் 'செத்த பாம்பு கண்டதும் அடிப்பார்! ஆரியர் செத்த பாம்பு ஆகிவிட்டனர்-அதாவது செல் வாக்கு படுசூரணமாகிவிட்டது-எனவே அவர்களை எப்படித் தாக்கினாலும் ஏன் என்று கேட்க 'நாதி' இல்லை, என்று எழுதி, மகிழ்கிறார். ஆரியர் செத்த பாம்பானது எப்படி? அதற்கும் காரணம் காட்டுகிறார்--ஆரியர்களின் அட்ட காசம் பல நூற்றாண்டுகளாக இங்கு எல்லைமீறிய நிலையி லிருந்தது. ஆனால் சு.ம. இயக்கத்துக்குப் பிறகு இவர்கள் செத்த பாம்புகளாகி விட்டனர்! படித்து, வீரஉணர்ச்சி பெறச் சொன்னார்களா, பிரித்துப் பிரித்து விளக்கமும் பொருத்தமும் பார்க்கச் சொன்னார்களா! அதிலும் நான் எழுதுவதை!!--என்று அந்த சோர்விலாச் சொற்போர்க் கோமான் கோபத்துடன் கூறக்கூடும் - நமக்கு அப்படி ஒரு பழக்கத்தைப் பெரியார் ஏற்படுத்திவிட்டதாலே இந்தத் தொல்லை-யார் கூறினாலும், பொருள் இருக்கிறதா, பொருத்தம் இருக்கிறதா, முன் பின் சொன்னதற்கு முரணா காமல் இருக்கிறதா, மூலக் கருத்தினைக் கெடுத்திடாத வகை யில் அமைந்திருக்கிறதா, என்றெல்லாம் பார்க்கச் சொல் கிறது! இடி ஓசை கேட்கும்போது, ஆதிதாளமா, ரூபகமா என்று யாரும் ஆராய வேண்டியதில்லை. ஆனால் மன்றத்தில் அமர்ந்து, இசைபாடும்போது, தாளம் சரியாக இருக்க வேண் டும் என்று தானே யாரும் எதிர்பார்ப்பார்கள் -அந்த முறை யிலே, நான் பார்க்கிறேன்,தம்பி,வேறென்ன!