உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

221 கிறது. நாட்டு மக்களுக்கு இதை எடுத்துக்காட்டி, நல்லறிவுச் சுடர் கொளுத்த, அரிஜன இலாகாவின் மூலம், சர்க்கார், பிரசாரத் தாட்கள் வெளியிட்டு, நாடெங்கும் அனுப்பினர். தம்பி ! சர்க்கார் வெளியிட்டதை அநேகமாக நீ கண்டிருக்க மாட்டாய், நமது கழகம் அதுபோல அச்சிட்டு அனுப்பியது கண்டிருப்பாய்! இப்போதும் ஒரு முறை, அதைப் பார், தம்பி ! அதிலே, ஆரியரை இழிவுபடுத்துவது என்ன காண் கிறோம்!! மோட்ச லோகம் என்ற புரட்டுப் பேசி என்னிடம்பறித்த பொருளை மூட்டை கட்டிக்கொண்டு போகிறாயா, முழு மோசக்காரா! இறக்கு மூட்டையை! எடு ஒட்டம்!! என்று கேட்டு, ஒரு சிறு கூட்டம், ஆரியனை அடித்து விரட்டுவது போலப் 'போஸ்டர்' அல்ல அது. ஐயா! உலகோரே! உங்கள் நாட்டிலெல்லாம் இல்லாத ஒரு அதிசயம் காணீர் இதோ இவன், பிரமனின் முகத்தில் பிறந்தவன்! என்று கூறி, ஆரியரை மற்ற நாட்டவரிடம் காட்ட, அவர்கள் கைக் கொட்டிச் சிரித்து, மடத்தன மிக்க வனே! அப்படியா கூறினாய்? என்று கேட்டுக் கேலி செய்வது போன்ற, பிரசார போஸ்டர் அல்ல!! பிச்சைக்காரன், கோலம், பெருந்திண்டிக்காரன் கோலம் காட்டிடும் போஸ்டர்கூட அல்ல! தீண்டாதவனை, தொடாதே என்று கூறும், வைதீகன் சர்க்கார் சட்டப்படி, சிறையில் தள்ளப்படுகிறான் என்பதை விளக்கும் போஸ்டர்! இது, ஆரியருக்கு ஆத்திர மூட்டிவிட்டது! செத்த பாம்பு. படமெடுத்தாடிற்று! சென்னை சர்க்கார், 'நாக பூஜை' செய்து, 'சினம் விடுக! பிழை பொறுத்திடுக' என்று கெஞ்சு கிறது! டால்மியாபுரம், கல்லக்குடி ஆக்கப்படவேண்டும் என்ப தற்கான கிளர்ச்சி, பொதுமக்களிடம் பரவி இருந்தது போல, இரயில்வே ஸ்டேஷன் போர்டுகளில் இந்தி ஆதிக்க மொழி இருப்பது அக்ரமம், அதனை அழித்திடவேண்டும் என்ப தற்கான கிளர்ச்சி நாட்டில் வலிவுடன் வடிவெடுத்ததுபோல, தமிழரின் எல்லையைப் பிற மொழியாளர் பறித்திடும் அக்ரமத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற கிளர்ச்சி, நல்லோர் உள்ளத்தை எல்லாம் தொட்டு, நாட்டிலே நல்ல நிலை அடைந்தது போல, ஆஹா1 ஆரியரை இங்ஙனம் அவமதிப்பதா, அரசாங் கம் இந்த அக்ரமத்துக்கு இடம் தருவதா, என்று கோபித்துக்