உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

227 மின்னல் இடையாள்! பேசும் பேரின்பம்! எனக்குக் கிட்டிட மார்க்கமொன்று காட்டிட வேண்டும், மாதவம் செய்தவரே! மனிதகுலத்தை உய்விக்க வந்த மகானே! என்று இறைஞ்சி, பொன்னும் பொருளும் காலடியில் கொட்டி, கண்ணீர் சிந்தி னால், மூவாசையைத் துறந்து, துறந்ததால் மூலத்தை உணர்ந்து "மேலோன்' என்ற விருதுபெற்ற 'குருமார்கள் காதற்கனியை அந்தக் கனவான் பெறுவதற்கான 'ஆசி' அருளுவார்!! கட்டணம், காரிகையின் அழகுக்குத் தக்கபடி! காளையைத் துளைத்திடும் காமக் கணையின் கூர்மைக்கு ஏற்ற வண்ணம் அமைந்திருக்கும்! ஏழை எளியோர்களை ஏறெடுத்துப் பாரார்போலும் இந் தக் 'குருமார்' என்று எண்ணிவிடாதே தம்பி! ஏழைக்கும் குருமார்களுக்கு இரையாகிடும் வாய்ப்புக் கிடைத்திடும். அம்மை நோய் ஐயனே, என் ஐந்தாண்டுப் பாலகனுக்கு அருகே நெருங்கவே முடியவில்லை! அவன் போடும், 'ஐயோ- அம்மா'வைக் கேட்க முடியவில்லை! ஆவி துடித்திடும் நிலை! என்று ஏழை அழுதபடி கூறுவான், அருளை விற்றிட அங்காடி வைத்திருந்த அதிசய மனிதர்கள், 'சக்திக்கேற்றபடி காணிக் கைத் தரச் சொல்லுவர்- ஜெபமாலையால் புனிதப்படுத்தப் பட்ட ஆடை, அருளாலயத் தோட்டத்து மூலிகை, அபிஷேக நீர்- இப்படி ஏதேனும் தருவர்! இவ்வளவு எதற்கு! விளைச் சல் சரியாக இருப்பதற்காக, நிலத்தில், 'மந்திர நீர்' தெளித் திடும் கைங்கரியம் செய்யும் மகான்களும் இருந்தனர்! அப்படிப்பட்ட நாட்டிலே, லெனின் பிறந்தார் - பாடுபட் டார் - வெற்றி பெற்றார் அதனை எடுத்துக் காட்டவே அந்த எழில் நகருக்கு, லெனின் கிராடு என்று பெயர்! கனல் கொடுமை கூனன், ஏறு நடையோனானான்! விழியற்றவன். கக்கும் கண்ணினனானான்! ஊமை, பேசினான்! ஒழிந்தது புதுமை பூத்தது/புதுமுறை ஏற்பட்டது! மதத்தைக் காட்டி ஏய்த்த மாபாவிகளை, மக்களின் திரண்டெழுந்த சக்தி மண்ணோடு மண்ணாக்கிற்று! அத்தகைய லெனின் கிராடு நகரில், சாமான்யர்கள்கூட அல்ல, பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், மாணவர்களும், மதம் வேண்டும்! என்று இன்று கேட்கிறார்கள் என்று இந்தியக் குடிஅரசுத் தலைவருக்குத் துணைசெய்பவராக விருது பெற்றுத் திகழும் வேதியர், வேத வேதாந்த வித்தகர், வியாகர்ணப் பண்டிதர், தத்துவாசிரியர், இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்! "அப்படியா! ஆஹா! ஆண்டவன் கருணையே கருணை! நாத்திகம் நசித்ததா! நாதன் அருளை நாடுகின்றார்களா! ஈசன் பெருமையே பெருமை! ஈதன்றோ அருமை! - என்று ஆதீனங் 7