உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

230 உடனே நான், 'நிறுத்து! நிறுத்து! என்று கூறியபடி என் வாயைத் திறந்து காட்டினேன்! பயல் கல்லாகிப் போனான்! ஏன் தெரியுமா? என் வாயிலே ஒரு பல்கூடக் கிடையாது! எனக்குத்தான் பற்கள் இல்லையே?என்னசெய்வான்!தோற்று விட்டான்! அட பாவிப் பயலே இந்தச் சூது தெரியாமல் போய்விட்டதே? எங்கே உன்னுடைய பற்கள்? என்று கேட் டான்; பற்களை உதிரச் செய்யும் சூரப்புலி நீ ஒருவன் தானா, நேற்றிரவே என் பற்களை உதிர்த்து விட்டாள், என் மனைவி, என்றேன். உண்மையும் அதுதான். அவன் 'இடி இடி' எனச் சிரித்துவிட்டு, பல்லே இல்லாதபோது,பல்லை எப்படி உடைக்க முடியும். பயலே, நீ கெட்டிக்காரன்தான், என்று என்னைப் பாராட்டினான். இது அவன் சொன்ன கதை. கேட்ட ஊர் மக்களும் கை கொட்டிச் சிரித்தனர். ஏற்கனவே மனைவி கொடுத்த அறை யால் பல்லை இழந்துவிட்ட காரணத்தால், அறை கொடுத்துப் பற்களை உதிரச் செய்யும் முரடனை அவனால்‘ஜெயித்திட முடிந் தது. அதுபோல டாக்டர் இராதாகிருஷ்ணன், லெனின்கிராடு பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடமும், மாணவர்களிடமும் நடந்து கொண்டதால் வெற்றி கிடைத்திருக்கிறது. புதிய அறிவின் காரணமாக, மதத்திலே எந்தெந்த ஆபாசங்கள் புரட்டுகள், உள்ளனவோ அவைகளெல்லாம் உதிர்ந்து போய்விட்டன -தத்துவம் மட்டும்தான் மிச்சமாக இருக்கிறது - அந்த தத்துவத்தைக் காட்டி, இந்துமதத்தை ஏற்றுக்கொள்ள என்ன தடை என்றுகேட்டிருக்கிறார். என்ன சொல்வார்கள்? என்ன சொன்னான் கதையில் வரும் முரடன்! அது போலத்தான். லெனின்கிராடு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மாண வர்களும் இவரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்டனர்- என்ன பதிலளித்தார் என்பதுபற்றி, இந்த வேதாந்தி தம் முடைய பரோடா சொற்பொழிவிலே கூறவில்லை. மதம் என்றால், சத்தியத்தை, நற்குணத்தை, அழகை நாடிக் கண்டறிவது என்று சொன்னேன்; அந்தப் பேரா சிரியர்களும் மாணவர்களும், சரி சரி! சந்தோஷம்! இது தான் மதம் என்றால், அந்த மதத்தை நாங்களும் விரும்பு கிறோம் என்று கூறினர் என்று இவர் கூறுகிறார். பற்கள் இருந்தால், கொடுக்கிற அறையில், பொலபொல வென உதிர்ந்திருக்கும், பற்கள் இல்லை. எனவே அறைவிழ வில்லை - கதையில். 'பாரதத்தில்' மதம் என்பதன் பெயரால் என்னென்ன இருக்கிறது, எத்தகைய இழிதன்மைகள், கொடுமைகள், மடை