உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

கதடிம்: 24 தம்பி, போலீஸ்! போலீஸ்! பண்டித நேருவின் போக்கு - மொழிவழி அரசின் அவசியம். "எங்கெங்கு கொதிப்பும் கொந்தளிப்பும் ஏற்படக் கூடும் என்று தெரிகிறதோ, அங்கெல்லாம் பலமான பாதுகாப்பு அமைத்துக்கொள்ள வேண்டும்; குறித்து, உடனே எமக்குத் தெரிவிக்க வேண்டும் " அது போலீஸ் பாதுகாப்பு அமைத்துக் கொள்வதென்றால் என்ன என்பதைத்தான்,எல்லோரும் அறிவார்களே! பொதுக் கூட்டத்திலே போலீஸ் வளையம் இருக்கும்! அத்துமீறிப் பேசி னார்கள் என்ற காரணம் காட்டி வழக்குகள் தொடரப்படும். தடியடி, துப்பாக்கி, இவைகளெல்லாம் கிளம்பும். கல்லக்குடியிலும் தூத்துக்குடியிலும் நாம் அனுபவித் தோம். பிற கட்சிக்காரர்கள் பிற இடங்களிலே கண்டனர். போலீஸ் பாதுகாப்பு! தம்பி!வெள்ளைக்கார ஏகாதிபத்யம் எந்தமுறையைக் கையாண்டு வந்ததோ அது இன்னும் மடிந்துபடவில்லை. மாறாக, புது மெருகுடன் புறப்படுகிறது. கொதிப்பும் கொந்தளிப்பும் உள்ள இடங்களிலேபோலீஸ் பாதுகாப்பு பலமாக இருக்கட்டும் என்றால், அதன் பொருள், மக்கள் தங்கள் மனக்குறையை எடுத்துக் கூறினால், குமுறலை வெளியிட்டால், பிடி, அடி, சுடு, விடாதே என்பது தான். கொதிப்பும் கொந்தளிப்பும், மக்களிடம் ஏன் ஏற்பட்டது. மக்களுடைய இயல்பா அது, பொழுது போக்கா! பாடு பல பட்டு கிடைப்பதைக் கொண்டு குடும்பம் நடத்திச்செல்வோம் என்ற பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டுவரும் மக்கள், அமைந்திருக்கிற சர்க்கார் கேட்கும் வரி கொடுத்து, காட்டும் வழி நடந்து, திட்டும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டுவரும் மக்கள், ஏன்கொதிப்பு அடைகிறார்கள்? என்ன காரணத்தால் கொந்தளிப்பு ஏற்படுகிறது, அந்தக் கொதிப்பை யும் கொந்தளிப்பையும் போக்குவதற்கான வழிவகை என்ன என்பதுபற்றி எண்ணிப் பார்த்திடாமல், அதற்கேற்ற முறை அக-15