உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

246 தம்பி ! நமது இயக்கத் தோழர்களிடம் நல்லார்வம் நிரம்ப இருக்கிறது - அதுபோலவே, நம்மிடம்உள்ள சாதனங் கள் பழுதுபட்ட நிலையில் உள்ளன- ஆர்வம்தான் துணை நிற் கிறது-நாலுக்கு மூன்று என்றாகும் போது, எப்படியோ நமது பயணம் நடந்தேறிவிடுகிறது. ஆனால், எத்தனை நாளைக்கு இது போல, என்று எண்ணாமலிருக்க முடியவில்லை. எனவே, நாம் நமது ஆர்வம் திறமை ஆகியவற்றினைச் செம்மையாக வைத் துக் கொள்வதுபோலவே, 'சாதனங்களை'யும்செம்மையாக்கிக் கொள்ள வேண்டும். திருவிதாங்கூர் சர்க்காரிடமிருந்து, தமிழ்ப் பகுதிகளைப் பெற எடுத்துக்கொள்ள வேண்டியமுயற்சி இருக்கிறதே, அது ஏறத்தாழ நான் குறிப்பிட்ட இந்தப் 'பயணம்' போன்றது. முதலமைச்சர் காமராஜர் எமக்கு வண்டி ஓட்டிக்கொண்டு வந்த நண்பர் போலவே, அச்சுமுறிந்தாலும் அதையும் கவனிக் காமல் இருந்திடும் அலட்சியப் போக்கிலே தான் நடந்துகொள் கிறார். நிபுணர்களைச் சிந்திக்கவைக்கும் பிரச்சினையாக இருக் கட்டும், மக்களின் மன திலே குழப்பமும் கொந்தளிப்பும்மூட்டி டத்தக்க பிரச்சினையாக, இருக்கட்டும், எவ்வளவு இன்றியமை யாத பிரச்சினையானாலும், இடர்மிகுந்த தானாலும், இவருக்கு மட்டும் சர்வ சாதாரணமாகத்தான் எந்தப் பிரச்சினையும் காணப்படுகிறது. எதுபற்றியும் ஒரு அக்கரையற்ற தன்மை, அலட்சியப் போக்குக் காண்கிறோம். ஆகட்டும் பார்ப்போம். அதற்கென்ன அவசரம், அது என்ன முக்கியம், அதுதானா வேலை, ஏன் இந்தப் பிரச்சினை, என்ற பேச்சிலேயே மன்னராக இருக்கிறார்! பிரச்சினைகளின் சிக்கல் புரியாததால் இவ்விதம் இருக்கி றாரா, புரிந்து, நம்மால் என்ன செய்யமுடியும் என்று திகைத் துப்போய், அந்தத் திகைப்பை மறைத்துக்கொள்ள இவ்விதம் பேசித் தொலைக்கிறரா, என்பதும் புரியவில்லை! தமிழ்நாடு என்று சென்னை இராஜ்யத்துக்குப் பெயர் இருக்கவேண்டும் என்று, நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் கூறுகின்றன -அவருடைய சேகாக்களே' கூடத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கூறுகிறார்கள். ஒரு துளி பர பரப்பு,சிறிதளவு மனஎழுச்சி கொஞ்சம் ஆர்வம் தெரிகிறதா? இல்லை! இல்லை! தமிழ்நாடு என்று பெயரா? ஏனாம்? அதற் கென்ன இப்போது அவசரம்? தெலுங்கரும் மலையாளிகளும், சென்னை இராஜ்யத்தை தமிழ்நாடு என்றுதான் அழைப்பார் கள் ! நாமே நம்மைத் தமிழ்நாடு என்று அழைத்துக் கொள்ள வேண்டுமா!- என்று கேட்கிறார். பெரியார் 'தமிழ் நாடு' என்ற பெயர் பெறக்கூட முடியா விட்டால், நாம் எதற்குத்தான் யோக்கியதை பெற்றவர்கள்