உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

248 சிங்கம் - ஒட்டகம் - சைகிள் - ஆலமரம்- குடிசை - கதிர் அரிவாள் - தாமரைப்பூ!-இவைகளெல்லாம் தோற்கவேண் டும், 'மாடு' வெற்றிபெற வேண்டும் - இது ஒன்றுதான் அவரு டைய பிரச்சினை - இதிலேதான் அவருக்கு அக்கரை - இதற் குத் தகுந்த திறமையையும் வசதிகளையும் பெற்றுக்கொள்வ திலேதான் அவர் காலங்கழிக்கிறார் - இந்த நோக்கம் வெற்றி பெறுவதற்கான தொடர்புகள் - துணை - தோழமை- கூட்டு இவைகளிலேதான் அவர் அபாரமான அறிவாற்றலைக் காட்டுகிறார் - இதுதானா ஒரு ராஜ்ய முதலமைச்சருக்கு வேலை என்று கேட்டவரிடம், இதைவிட வேறு வேலை என்ன இருக் கிறது என்று, அவர் கேட்கவே செய்தாராம்! LON ஒவ்வோர் 'ராஜ்ய' முதல்வர்களும், இரண்டாவது ஐந் தாண்டுத் திட்டத்தில், எமக்கு இந்தத் திட்டம் வேண்டும், இவ்வளவு தொகை வேண்டும்-இராஜ்யங்கள் புதிதாக அமை யும்போது இன்னின்ன பகுதிகள் வேண்டும், இன்னின்னஉரி மைகள் வேண்டும் என்று கேட்டும், கிளர்ச்சி நடத்தியும் வரு கிற நேரமாகப் பார்த்து, இவர் செய்தது என்ன?ஒட்டகத்தை நுழைய விடாதீர்கள், சிங்கத்தை விரட்டுங்கள்; அருணாசலம் நல்லவர், ஆண்டியப்பன் வேண்டியவர், மாடு நல்ல பிராணி மறவாது'சூடு போடுங்கள்' என்று இந்த 'வேலை'யைத்தான் செய்து கொண்டிருந்தார். இதுதான் இவருக்கு உகந்த வேலை, இதற்குமட்டுமே இவர் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டி ருக்கிறார். எனவே நேருவாகப் பார்த்து, நியாயத்துக்குக் கட்டுப்பட்டு, தமிழரின் உரிமைகளைத் தந்தால் உண்டேதவிர, தம்பி ! காமராஜர் தமது திறமையினால், தமிழரின் உரிமை யைப் பெற்றுத் தருவர், என்று என்னால் துளியும் நம்பமுடிய வில்லை. கேட்பார்-புள்ளி விவரம் தரப்படும், அதைத் தபா லில் அனுப்புவார் -டில்லி இணங்க மறுத்தால் சரி, போனால் போகட்டும் தேவிகுளம் இங்கு இருந்தால்என்ன அங்கு இருந் தால் என்ன என்று கூறிவிடுவாரே தவிர, தமிழர் உரிமை, தமிழகம், இவைபற்றித் துளியும் அக்கரை காட்டமாட்டார். நாம்தான் அவரைப் பச்சைத் தமிழர் என்று பாராட்டுகிறோம் அவர், மொழி, இனம்,நாட்டு உணர்ச்சிகளுக்குத்தமது உள் ளத்தில் இடமளித்துப் பழக்கப்பட்டவரே அல்ல-அவருக்குச் சுறுசுறுப்பும் தெம்பும் தரக்கூடிய ஒரே பிரச்சினை, ஓட்டு வேட்டை" ஒன்றுதான். வேறு எதிலும் அவருக்கு அக்கரை யும் கிடையாது, பயிற்சியும் ஏற்பட்டதில்லை - வேறு எல்லாப் பிரச்சினைகளும் அவருக்குச் 'சின்ன விஷயம்'--ஆகட்டும் பார்க்கலாம் - அதனால் என்ன, என்பவைகளே! ! 6-11-1955. அ. அன்புள்ள,