உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255

255 வேசம், மதுரம் அவர்களிடம் இருந்திருந்தால், மாலையும்கையு மாகவா காத்துக்கொண்டிருந்திருப்பார்? இங்கே மாலையும் கையுமாக மதுரம்! நேரமில்லை இதற்கெல்லாம் என்று கூறி அலட்சியப்படுத்தும் நேரு! தம்பி! நாகநாட்டிலே, வருகிறார் அமைச்சர், வரவேற்று உபசரியுங்கள் என்று சர்க்கார் சங்கு ஊதுகிறது; நாகநாட்டுத் தலைவன், நமக்கு அந்த வரவேற் பிலே வேலை இல்லை என்று கூறுகிறார் ; நாகர்கள் நமது விடுத லைக் கிளர்ச்சியை ஒடுக்கும் பகைவனை நாம் வரவேற்பதா மானக்கேடல்லவா என்று கூறுவதுபோல, வரவேற்பிலே கலந்துகொள்ளாது ஒதுங்கிவிடுகிறார்கள். நாக நாடு! திராவிட நாடு ஒப்பிடும்போது, என்ன தோன்றுகிறது, தம்பி? தம்பி! அதுமட்டுமல்ல, கோலாகலமாகப் பவனி வந்தார் அமைச்சர்-நாக நாட்டு விடுதலை வீரன், அவரைச் சட்டை செய்யவில்லை -சென்று பார்க்கவில்லை! நாக நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பண்டித பந்த் தெரிந்துகொள்ள இதைவிட வேறென்ன வேண்டும்? நாக நாடு நாகருக்கே! என்ற திட்டத்தை விட்டுவிடு கிறேன், (டில்லி ஆதிபத்தியத்துக்கு) இந்திய குடியாட்சிக்குக் கட்டுப்படுகிறேன் என்று வாக்களித்துவிட்டு, அமைச்சரைப் பேட்டி கண்டு பேசலாம் என்றனராம் அதிகாரிகள். பிசோ இணங்கவில்லை, என்று பத்திரிகைச் செய்து கூறுகிறது! இணங்காததை வார்த்தைகளால் சொல்லி இருக்கமாட்டார் தம்பி! ஒரு அலட்சியமான புன்னகை மூலமே பதிலளித் திருப்பார்! பைத்யக்காரர்களே! நாக நாடு நாகருக்கே எனும் என் இதயகீதத்தை இழந்துவிட்டு, இந்த உற்சவ மூர்த்தி யைத் தரிசிக்கவா? என்ன பைத்யக்காரத்தனம்! வெள்ளையனை எதிர்த்துச் சுயராஜ்யப் போர் நடத்தினீர்களாமே, உங்களுக்கு விடுதலை உணர்ச்சியின் மாண்பு விளங்காத காரணம் என்ன? கண்ணை விற்றுவிட்டுச் சித்திரம் வாங்குவதாம்! என்றெல்லாம் புன்னகை பேசியிருக்கும், "வறுமையை ஓட்டுவோம்- வாட்டத்தைத் போம் - புது வாழ்வு அளிப்போம் - மான்யம் துடைப் தாராளமாக வும் ஏராளமாகவும் அளிக்கிறோம் - தயக்கமின்றிக் கேளுங்கள் -தனிநாடு என்ற மனப்பான்மை கூடாது-இந்தியாவில் இருந்தால் எல்லா வசதியும் கிடைக்கும்' - என்றெல்லாம் பண்டித பந்த் பேசினாராம். அமைச்சரைச் சூழ்ந்து நின்றிருந்த அதிகாரிகள், இடை யிடையே (ஏற்பாட்டின்படி)கை தட்டி ஆரவாரம் செய்திருப் பர்! ஆனால், நாக நாட்டு விடுதலை வீரன் பிசோ? எந்தக் குன்றின்மீது நடந்து சென்றுகொண்டே வீர சுதந்திரம் வேண்டி நின்றார், பின்னர், வேறொன்று வேண்டுவரோ!என்ற பண் பாடியபடி புதிய பாசறைகளை அமைப்பதற்காக ஏறு நடை போட்டுக்கொண்டிருந்தானோ? இங்கே அலங்காரப்