உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

கடிதம்:7 மகுடி ஊதும் மகானுபாவர்கள்! தம்பி, கலையைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்துதல்- ஆச்சாரியாரின் இலக்கிய நுழைவும் குழப்பமும் "ஆமாம். இவர்கள் பூஜையும் பக்தியும் பத்தி எரிஞ்சாப் போலத்தான் இருக்கு சுட்ட செங்கல்லை வைத்துச் செய்கிற பூஜைக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப் பாட்டம்?" என்றாள். அவர்கள் பூஜித்த தெய்வம் செங் கல்லால் ஆனதுதான். எனக்குக் கோபம் வந்தது. ' நீ கோவிலிலேபோய்க் குடும்பிகிற கருங்கல் சாமியிடம் மாத்திரம் என்ன இருக் கிறதாம்?" என்றேன். 'போதும்' பேசாமல் இருங்கள். கோவில்களிலே மந்திரங்கள், யந்திரங்கள் எல்லாம் செய்து விக்ரஹங் களைப் பிரதிஷ்டை பண்ணுகிறார்கள். அந்த விக்ரஹங் களும் இந்தச் சுட்ட செங்கல்லும் ஒன்றாய்விடுமாக்கும்?" என்றாள். "அது எனக்குத் தெரியாது முன்பு கஜனி மகமதும் அவனுடைய ஆட்களும் கோயில்களை இடித்துத்தள்ளி விக்ரகங்களை எல்லாம் மசூதிகளில் வாசற்படிகளாகப் போட்ட காலத்தில், இந்த யந்திர மந்திரங்கள் ஒன்றும் பலிக்கவில்லை. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள், நரசிம்மாவதாரத்தில் வந்ததுபோல், அந்த வாசற்படி களிலிருந்து வந்து. கஜனியின் ஆட்களை; ஹிரண்யனைக் கிழித்தது போல கிழித்துவிடவில்லை. பூஜைக்குக் கருங் கல்லாய் இருந்தாலென்ன? தெய்வம் கல்லுக்குள்ளேயா இருக்கிறது? நெஞ்சுக்குள்ளே வேண்டும்" என்றேன். ராணியும் நானும் இப்படிப் பேசிக்கொண்டோம் என்று எண்ணிவிடாதே-வாதாடும் அளவுக்கு நேரம் கூடக் கிடைக் கிறதா ? இது சில நாட்களுக்குமுன் நான் படித்த கதையில், ஒரு புருஷனும் மனைவியும் நடாத்தும் உரையாடல், சிறுகதை பெரிய தத்துவ விளக்கத்துக்காகத் தீட்டப்படும் 'ரகம் இது என்று முன்னுரை சிபாரிசு செய்கிறது. கதை கூறுகிறேன் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க் கிறான் ஒரு இலக்கிய ஆய்வாளன் வெளியில் ரிக்சாக்காரர்கள் செங்கல் ஒன்றை நிறுத்திவைத்துப் பூச்சொரிந்து பூஜை செய்