உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64 அபின் போதை தருவது, மதமும் மக்கள் மன திலே ஒரு மயக்க மளிக்கிறது, என்பது பொருள்! அந்தத் தத்துவம் பொய் என்று கதை கிறது? எங்கே காட்டு மதம் - பூஜை செய்ய வைத்தது - செய்தனர். குடி- சண்டையைக் கிளப்பிற்று - சண்டை போட்டனர். சண்டையை நிறுத்தி சன்மார்க்கத்தில் ஈடுபடுத்த மதமா பயன்பட்டது? இல்லை! குடிக்காதீர்கள் என்ற அறி வுரை பயன்பட்டது. குடித்துவிட்டுக் கூத்தாடிய ரிக்ஷாக்காரர்கள் தெளிவு பெறுகிறார்கள், இவர் 'போதை' கொள்கிறார் - மதபோதை!! இதைக் கக்க, ஒரு கதை! இந்தக் கதையின் இடையே கடவுள் எங்கே இருக்கிறார், கல்லிலா, நெஞ்சிலா என்று ஒரு விவாதம் - முடிவு பெறாமல்!! மேதைகளென்றும், மறுமலர்ச்சி எழுத்தாளர்களென்றும் தங்களைக் கூறிக் கொள்பவர்கள் பெரும்பாலும், இதே பாணி'யில் தான் எழுதுகிறார்கள். " முற்போக்குக் கருத்துக்கள் தூவப்படும்! பிறகு, அது மறைக்கப்படும் அளவுக்குப் பழைமை கொட்டப்படும்!! இந்தப் போக்கினர்தான், கதை, நாடகம், சினிமா இவைகளிலே பிரச்சாரம் கூடாது ---பொதுவாகக் கலையைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினால், அதன் மேன்மையே குலைந்து போகிறது, தூய்மை நாசமாகிறது என்று "இலக்கிய உபதேசம்" செய்பவர்கள். கார்ல் மார்க்சின் தத்துவத்தைக் கண்டிக்கவேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது இதிலே? ஏன் அதைச் சொருகிக் காட்டுகிறார்! ! இது பிரசாரமல்லவா? பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்று பேசுப பவர்கள், தமது ஒவ்வொரு முயற்சியிலும் பிரசாரத்தில்தான் ஈடுபடுகிறார்கள் - வெற்றி பெறுவதில்லை, பாபம். அதனால் தான், வெந்த உள்ளத்துடன், பிறர் வெற்றிகரமாகக்கலையை நல்லறிவுப் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவது கண்டு வெகுண்டு, கலையைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறார்கள். "அது என்ன வழக்கம், சார்? எனக்குத் துளியும் பிடிப் பதில்லை, மனைவியைக் கூட்டிக் கொண்டுதான், ‘பீச்'சுக்கு வர வேண்டுமா? பொம்பனாட்டிங்களோடு அவளை வரச் சொல்லிவிட்டு, வரப்படாதோ! நான் அப்படித்தான்" என் கிறார் எம்பெருமாளய்யங்கார்! காரணம் இருக்கலாம் - அவ