உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

67 தெரியாதுங்க” என்று பேசும் திம்மப்பன்போல, “யாருக்கு? உன் மக கலியாணமா? ஆவணி பதினைந்தா! ஆற்காட்டிலா! ஆறு பவுனிலா செயின் போடணும்! செலவு ஆயிரத்துக்கு மேலே ஆகுமோ! நல்ல மனுஷன், உனக்குச் சகாயம் செய்ய யாருக்கும் இஷ்டம்தான், பகவான் எல்லாக் காரியத்தையும் சுபமாக முடித்து வைப்பார், கவலைப்படாதே’> என்று உபசா ரத்தை வாரி வழங்கிவிட்டு, கடைசியில், "இப்ப என்னிடம் பணம் இல்லையே, வேறே இடம் பாரப்பா! என்று கடன் தந்து உதவாமல் விரட்டிவிடும் திமிரப்பன் போல், கடவுள் கல்லில் இருந்தால் கஜினியைக் கிழித்தெறிந்திருக்க வேண் கிளப்பிவிட்டு, டாமா என்று சூரத்தனமான கேள்வியைக் சுட்டுக் கொண்டுவா, இட்டிலியை என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடுவதா!! இந்தப் போக்கினால்தான், இவர்களைவிட இலக்கியத் திறமையும் எழுதும் திறமையும் குறைந்த அளவு பெற்றுள்ள நம்மவர்கள் பெறுகிற வகையான அளவுள்ள வெற்றியை இவர்களால் பெற முடிவதில்லை ஆச்சாரியாரல்லவா இந்தக் 'கோஷ்டிக்'க்குத் தலைமை வகிக்கிறார்! எவ்வளவு பரிதாபம் பாருங்கள்? இந்தத் தள்ளாத வயதில், இதுநாள் வரை, தாம் பெற்ற அனுபவத்தின் காரணமாக பெறக் கிடைக்கும் அரசி யல் நுணுக்கங்களை எழுத வேண்டியவர், அனுமனின் வாலில் மூட்டப்பட்ட தீ பற்றி எழுதிக் கொண்டிருக்க வேண்டி நேரிடு கிறது! பழமைக்கு ஏதோ புது விளக்கம் கொடுத்து, நம்மவர் களின் வாதங்களைத் தவிடு பொடியாக்கி விடுவதாக மனப் பால் குடிக்கிறார்கள்; புதுமையோ எந்தத் திக்கிலும் இவர் களைத் தாக்கித் தகர்த்த வண்ணம் இருக்கிறது! இவர்களின் பழைமைப் பிரசாரத்தின் காரணமாக, ‘பக்தர்'களாக இருந்து வருபவர்கள், இவர்கள் நமக்குச் சமா தானம் கூறுவதற்காக விளக்கங்கள், தத்துவார்த்தங்கள் தரு கிறார்களே. அவைகளையாவது ஏற்றுக்கொண்டு, அவைகளின் படியாவது தங்கள் போக்கை மாற்றிக் கொள்கிறார்களா என்று பார்த்தால், அதுவுமில்லை வயலில் விளைச்சல் அதிகம் வேண்டும் - அதற்கு வனதேவதைக்கு நரபலி கொடுக்க வேண்டும் என்ற பழைமை எண்ணம் பிடித்த ஆதிவாசிகள், கடந்த கிழமைதான், எட்டு வயதுப் பாலகனைக் கொன்று படைத்திருக்கிறார்கள்! எத்தன் இவன். பணத்தை எடுத்துக் கொண்டு கம்பி நீட் டினான் என்கின்றனர் போலீசார்;பிடிபட்ட பாஸ்கரராவ் என் பவனோ, நான் பக்தன் எத்தனல்ல!பணத்தை எடுத்தேன் ; செலவிட்டேன்; எதற்கு? பகவானைப் பிரத்யட்சமாகக் காட்டு