உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

71 என்றெல்லாம் பத்திரிகையில் செய்திகள் வருகின்றன - எல் லாம் தீனா மூனா 'கானாக்களுக்கு! இதோ அவர் இருக்கிறார், அமைச்சர் வழக்கறிஞர், ஆச்சாரியாரின் அத்யந்த நண்பர்; அவரை அல்லவா நாடு இப்படிக் கொண்டாடவேண்டும். நாவலர் நெடுஞ்செழியனுக்கா இப்படிப்பட்ட நல்வரவேற்பு கள் என்று எண்ணும்போதே உள்ளம் எரிமலையாகிறது- கக்கிவிட்டார்!! சப்தரிஷீஸ்வரர் கோயில் அதிகாரிகள் பூர்ண கும்பம் எடுத்து வரவேற்க, எடயாத்து மங்களந்தைச் சேர்ந்த ஸ்ரீ ஹாலாஸ்யநாத குருக்கள், லால்குடி தாலூகா அர்ச்சகர் சங் கத்தின் சார்பில் வரவேற்பு உபசாரப் பததிரம் வாசித்தளிக்க, வருக! அமமுக! மாலை அணிந்து கொள்க! என்று வட்டாரப் பெரியவர், ராஜா சிதம்பரம் அன்பு ஒழுக ஒழுக உபசரிக்கப் பவனிவந்த, சென்னை ராஜ்ய நிதி அமைச்சர் கனம் சுப்ரமணி யம் அவர்கள், பிரம்மானநதமடைந்து, 'ஓஹோஹோ! நமக் கும் இவ்வளவு அமோகமான ஆதரவு இருக்கிறதா, இனி என்ன தயக்கம், இதுகளை இதே நேரத்தில் தீர்த்துக் கட்டி வி... வேண்டியதுதான்' என்று தீர்மானித்து, நமது கழகங் களின் மீது பாய்ந்திருக்கிறார் சென்ற கிழமை!! ஆஹஹாரம் செய்து தமது மலைபோன்ற உடல் குலுங்கக் குலுங்க ராஜா சிதம்பரம் நகைத்திருப்பார்; அவ்வளவு காரசாரமாகப் பேசி னாராம் அமைச்சர், ராஜா சிதம்பரம் அவர்களின் வீரதீரத் தைப் பாராட்டினாராம்!! ராஜா சிதம்பரம் முன்பு காங்கிரசை எதிர்த்துவந்தார்; இப்போது காங்கிரசில் சேர்ந்துவிட்டாா; இது கோழைத்தன மல்ல; இதுதான் வீரம்! மந்திரியின் மணிவாசகம் இது. இதன் பொருள் பற்றிய விளக்கத்தைப் பிறகு கவனிப்போம், தம்பி! முதலில், இவர் இது போலப் பேசவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதுபற்றி எண்ணிப் பார்த்தால், ருசிகரமான பல விஷயங்கள் தெரியும். யாராரோ ஏதேதோ பேசி இருக்கிறார்கள், ராஜா சிதம் பரத்தின் போக்குப்பற்றி! அமைச்சரிடமே சிலர் கூறியிருக்கக் கூடும் - பலர் அவர் காதில் படும்படி பேசி இருக்கவேண்டும். அல்லது, தன் போக்கைக் கேவலமானது, நாணய மற்றது நயவஞ்சகமானது என்று பலரும் கூறி ஏசுகிறார்கள் என்று ராஜா சிதம்பரம் அவர்களே, அமைச்சரிடம் கூறி அழுதிருக்க வேண்டும். "பாரப்பா பார்! இந்தப் பெரிய மனிதர்களுடைய யோக் கியதை எப்படியிருக்கிறது பார்?ராஜா சிதம்பரம், காங்கிரஸ் மந்திரியை வரவேற்கிற காட்சியைப் பார்! காங்கிரசை முழு மூச்சாக எதிர்த்த கனவானப்பா இவர்! இப்போது பார், காவடி தூக்கி ஆடுகிறார்.